Home /News /explainers /

Explainer: மின்சார திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் - காரணம் என்ன?

Explainer: மின்சார திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் மாநிலங்கள் - காரணம் என்ன?

மின்சார திருத்த மசோதா

மின்சார திருத்த மசோதா

தனியார் நிறுவனங்களின் நுழைவு இந்த புதிய திருத்தங்கள் மின் விநியோக உரிமத்தை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம். ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மின் நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான மின் விநியோகஸ்தரை தேர்வு செய்துகொள்ளலாம்.

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் மற்றும் மூன்று வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள் நடத்திய அமளி காரணமாக பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வந்தது. நடப்பு மழைக்கால கூட்டத்தொடரின் முதல் மூன்று வாரங்கள் இப்படியே சென்றன. இதனுடன் சேர்த்து இப்போது மத்திய அரசின் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட மின்சார திருத்த மசோதா 2021-க்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் மின் விநியோகத்தின் உரிமத்தை மாநிலங்கள் இழக்க நேரிடும் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால், மின்சார உற்பத்தி, மின் விநியோகம் ஆகியவை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து, தனியார் வசம் செல்லலாம் என்று கூறப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்களுக்கு மின்சாரம் என்பது எட்டாக்கனியாக மாறி விடும். இதனால் நுகர்வோர் கடுமையான பாதிப்பினை எதிர்கொள்ளலாம். இதனால் தமிழ்நாட்டில் வழங்கப்படும் இலவச மின்சாரத்திற்கு தடை ஏற்படலாம். இந்த திருத்த மசோதா, மின்சாரம் சட்டம் 2003-ல் சில திருத்தங்களை முன்மொழிகிறது. தற்போது பாராளுமன்ற கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்படும் 17 மசோதாக்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த திருத்த மசோதாவின் முக்கிய முன்மொழிவுகள் என்ன?

தனியார் நிறுவனங்களின் நுழைவு: இந்த புதிய திருத்தங்கள் மின் விநியோக உரிமத்தை இழக்கும் அபாயத்தை ஏற்படுத்தலாம். தனியார் நிறுவனங்களை இந்தத் துறையில் நுழைப்பதன் மூலம், அரசுக்குச் சொந்தமான மின் விநியோக நிறுவனங்களுடன் (டிஸ்காம்கள்) போட்டியிட மத்திய அரசு அனுமதி வழங்கும். ஒருவேளை இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், மின் நுகர்வோர்கள் தங்களுக்கு விருப்பமான மின் விநியோகஸ்தரை தேர்வு செய்துகொள்ளலாம்.

ALSO READ |  சிங்கிள்ஸ் உஷார்.. மேட்ரிமோனியில் வலை விரித்த மோசடி பெண் - போலீஸில் பிடித்துக்கொடுத்த மாப்பிள்ளை

இதுதொடர்பாக நிதியமைச்சர் தனது பட்ஜெட் உரையின் போது தெரிவித்ததாவது, ​​நுகர்வோர் டிஸ்காம்களுக்கு இடையே அதாவது மின் விநியோகஸ்தர்களுக்கு இடையே தேர்வு செய்ய ஒரு கட்டமைப்பை கொண்டு வருவதாக அறிவித்தார். மேலும் இந்த மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது, மின் ஒப்பந்த அமலாக்க ஆணையத்தின் (ECEA) அரசியலமைப்பை இந்த மசோதா வழங்குகிறது. மின்சாரத் துறையில் ஒப்பந்தம் தொடர்பான சர்ச்சைகளை தீர்ப்பதற்கு ECEA க்கு மட்டுமே அதிகாரம் இருக்கும். புதுப்பிக்கத்தக்க கொள்முதல் கடமையை (RPO) சந்திப்பதில் உரிமதாரர்கள் இணங்கவில்லை என்றால் சில அபராதங்களையும் இந்த மசோதா விதிக்கிறது.

அனைத்து மின்சார விநியோக உரிமதாரர்களும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து குறைந்தபட்சம் குறிப்பிட்ட அளவு மின்சாரத்தை வாங்கவும் அல்லது உற்பத்தி செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (APTEL), மத்திய மற்றும் மாநில ஒழுங்குமுறை ஆணையங்கள் (CERC, SERCs) மற்றும் ECEA ஆகியவற்றின் தலைவர் மற்றும் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க ஒரு தேர்வு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிகிறது.

மசோதாவுக்கு மாநில அரசாங்கங்களிடம் எழும் எதிர்ப்புகள்:

டெல்லி, அகமதாபாத் மற்றும் மும்பை போன்ற நகரங்களைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மின்சாரம் அரசுக்கு சொந்தமான நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுகிறது. மேலும் இந்த மசோதா குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடிக்கு அண்மையில் எழுதிய கடிதத்தில், தனியார் நிறுவனங்கள் நுழையும் பட்சத்தில், அவற்றால் தனியார் நிறுவனங்கள் வணிக மற்றும் தொழில்துறை நுகர்வோருக்கு மட்டுமே மின்சாரம் வழங்க முடியும்.

ALSO READ |  பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கிற்கு காலக்கெடு - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

அதே நேரத்தில் ஏழை மற்றும் கிராமப்புற நுகர்வோர் பாதிக்கப்படுவார்கள் மற்றும் அவர்கள் பொதுத்துறை டிஸ்காம்களுக்கு தள்ளப்படுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதா மக்களுக்கு விரோதமானது என்றும் அவர் கூறினார். சமீபத்தில், சிவசேனா எம்.பி. RPO விதிகளுக்கு இணங்கத் தவறியதற்காக அதிக அபராதம் விதிக்கப்பட்டதற்கு பிற மாநில அரசுகள் கவலை தெரிவித்துள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electricity, Electricity bill

அடுத்த செய்தி