Home /News /explainers /

கியான்வாபி பள்ளிவாசல் சர்ச்சை: நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

கியான்வாபி பள்ளிவாசல் சர்ச்சை: நீங்கள் தெரிந்து கொள்ளவேண்டியது என்ன?

1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தண்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாரு அதேபோன்று தொடர்ந்து இருக்கும்.

1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தண்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாரு அதேபோன்று தொடர்ந்து இருக்கும்.

1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தண்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாரு அதேபோன்று தொடர்ந்து இருக்கும்.

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி நகரில் அமைந்துள்ள கியான்வாபி பள்ளிவாசல் தேசியளவில் பேசும் பொருளாகியுள்ளது.

வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஏற்பாடுகள் சட்டம்) என்றால் என்ன?   

இராம- ஜென்ம பூமி - பாபர் மசூதி தொடர்பாக ஏற்பட்ட பதட்டத்தைத் தொடர்ந்து, மத வன்முறை மற்றும் சமூகவிரோத சிந்தனைகளை களைய , 1991ம் ஆண்டு வழிபாட்டு இடங்கள் (சிறப்பு ஏற்பாடுகள் சட்டம்) இயற்றப்பட்டது. 

பிரிவு 4ன் கீழ், 1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று நிலவி வந்த ஒரு வழிபாட்டு இடத்தின் சமயத் தண்மையானது, அந்த நாளில் நிலவி இருந்தவாரு அதேபோன்று தொடர்ந்து இருக்கும். 1947 ஆகஸ்ட் 15ம் நாளன்று இருந்தவாறான வழிபாட்டு இடம் எதனையும் உருமாற்றம் செய்ய தடை செய்வதற்கும், வழிபாட்டு இடம் அதனின் சமயத் தன்மை பேணுவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது.

இருப்பினும், தொல்பொருள் ஆய்வுமனைகள் மற்றும் எஞ்சி நிற்பவைகள் (The Ancient Monuments and Archaeological. Sites and Remains Act -1958) சட்டம் வாயிலாக பாதுகாக்கப்பட்டுள்ள தொன்மையான மற்றும் வரலாற்றுச் சின்னங்களுக்கு இச்சட்டம் பொருந்தாது.

முப்பது ஆண்டுகளாக தொடரும் வழக்கு:   

பழைய காசி விஸ்வநாதர் கோயில் இடிக்கப்பட்ட இடத்தில், கிபி 1699-இல் ஞான வாபி பள்ளிவாசல் நிறுவப்பட்டதாகவும், இங்கு வழிபாடு நடத்திட தங்களை அனுமதிக்க வேண்டுமெனவும் 1991-ஆம் ஆண்டில் இந்துக்கள் வாரணாசி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த அந்நீதிமன்றம், 1991 வருட வழிபட்டு இடங்கள் சட்டத்தின் படி, இந்த உரிமைகோரலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தீர்ப்பளித்தது. இதுதொடர்பான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி, இந்த வழக்கில் கள ஆய்வு  மேற்கொள்வது அத்தியாவசியமாகிறது என்று  தீர்ப்பளித்தார். இருப்பினும், மாவட்ட நீதிபதியின் இந்த உத்தரவுக்கு அலகாபாத் உயர்நீதிமன்றம்  தடையுத்தரவு பிறப்பித்தது. இந்த தடையுத்தரவு கடந்த 2020ம் ஆண்டு வரை அமலில் இருந்து வந்தது.

இந்நிலையில், கால அளவை வெளிப்படையாக குறிப்பிடாமல், பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவுகள் யாவும் ஆறு மாத காலஅளவுக்குப் பிறகு செல்லாது ஆகும் என்ற 2018 ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், மனுதாரர் மீண்டும் வாரணாசி சிவில் நீதிமன்றத்தை அணுகினர். இருப்பினும், சிவில் நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பதாக கடந்த 2020ம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும், மார்ச் 2020-ல் மறு கிழமைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவித்தது.
இந்நிலையில், இந்தப் பள்ளிவாசலில் இந்து கோயில் இருந்ததாகவும் இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.

இருப்பினும், இந்த வழக்கை விசாரித்து வந்த சிவில் நீதிமன்றம் பள்ளிவாசலை வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. இந்த உத்தரவை கடுமையாக விமர்சித்த அலகாதபாத் உயர்நீதிமன்றம், தொல்பொருள் ஆய்வுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில் தான், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம், கியான்வாபி பள்ளிவாசலில் இந்து கடவுள்கள் இருப்பதாகவும், இங்கு தங்களுக்கு வழிபாடு நடத்த அனுமதி வேண்டும் என ஐந்துப் பெண்கள் கொண்டக் குழு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், மீண்டும்  வீடியோ ஆதாரத்துடன் கள ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஏற்கனவே, உயர்நீதிமன்றம் மறு கிழமைக்கு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வாரணாசி நீதிமன்றத்தின் இந்த செயல் பலருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது.

பிரச்சனையின் தீவிரம் என்ன? கியான்வாபி பள்ளிவாசல் உளூப் பகுதியில் தொன்மையான மற்றும் வரலாற்றுச் சின்னங்கள் இருப்பதாக இந்து அமைப்பினர் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளை அவ்வாறு, நிரூபிக்கப்பட்டால், இந்த வழிபாட்டுத் தலம் 1991ம் சட்டத்திற்குள் கீழ் வராது. உரிமைகோரல் வழக்காக தொடரப்படும். 

மதுராவில் உள்ள ஈத்கா பள்ளிவாசலை அகற்ற வேண்டும் என்ற வழக்கும் தற்போது நிலுவையில் உள்ளது. கிருஷ்ண ஜென்மபூமி என்று கருதப்படும் இடத்தில், மதுரா கிருஷ்ணர் கோயிலின் 13.37 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்து, 17ஆம் நூற்றாண்டில் ஈத்கா பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது என்றும், அதனை மீட்டு மதுரா கிருஷ்ணர் கோயிலுக்கு மீட்டுத் தரவேன்டும் என மனுவில் கூறியிருந்தனர்.  

கியான்வாபி பள்ளிவாசல் வழக்கைத் தொடர்ந்து, ஈத்கா பள்ளிவாசலிலும் வீடியோவுடன் கூடிய களஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பலர் நீதிமன்றத்தில் கோரிக்கை மனுவைத்  தாக்கல் செய்து வருகின்றனர். இது, தொடர்பான வழக்கு வரும் மாதத்தில் விசாரணைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

மேலும், டெல்லியில் உள்ள குதுப் மினார் நினைவுச் சின்னங்களை, இந்து மற்றும் ஜைன மதத்தினரின் கோவில்களை அழித்து அதில் எஞ்சிய பொருட்களைக் கொண்டு நிறுவியதாக இந்து அமைப்பினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கும் தற்போது விசாரணையில் உள்ளது.

ஜி.எஸ்.டி கவுன்சிலின் அடிப்படை செயல்பாடே பிழை: மாநில உரிமைகளை நிலைநாட்டும் தீர்ப்பு- அமைச்சர் பி.டி.ஆர்

முன்னதாக, அயோத்தி விஷயம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த அளித்த தீர்ப்பில்," 1991 வருட வழிபாட்டு இடங்கள் சட்டம் நாட்டின் மதச்சார்பின்மைக்கு அடிநாதமாக உள்ளது. கடந்தகால தவறுகள், நமது எதிர்கால சிந்தனையை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான முகலாயர்கள் நடவடிக்கைகள் தொடர்பான எந்த வழக்கையும் நீதிமன்றம் ஏற்காது"என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த ஓட்டுமொத்த வழக்கும், நாட்டின் சிறுபான்மையினர் வழிபாடு தலங்கள் மீது உரிமை கோரும் வகையில் அமைந்துள்ளதால், இது சமூக நல்லிணக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Published by:Salanraj R
First published:

Tags: Mosque

அடுத்த செய்தி