ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம் எதையெல்லாம் அனுமதிக்கிறது? யாருக்கெல்லாம் பொருந்தும் ?

இந்தியாவில் கருக்கலைப்பு சட்டம் எதையெல்லாம் அனுமதிக்கிறது? யாருக்கெல்லாம் பொருந்தும் ?

கருக்கலைப்பு

கருக்கலைப்பு

ஒரு பெண் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், “போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Chennai, India

சர்வதேச பாதுகாப்பான கருக்கலைப்பு தினமான இன்று  உச்சநீதி மன்றம் ஒரு வரலாற்று தீர்ப்பை வழங்கியுள்ளது. திருமணமாகாத ஒருமித்த உறவில் உள்ள பெண்களும் 20-24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என்று தீர்ப்பளித்துள்ளது. இந்த நேரத்தில், இந்தியாவில் கருக்கலைப்பு பற்றிய சட்டங்கள் மற்றும் நியதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

தொடக்க காலம்..

இந்தியாவில் 1960கள் வரை, இந்தியாவில் கருக்கலைப்பு சட்டவிரோதமானது. கருக்கலைப்பு செய்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 312 இன் கீழ் அந்த பெண்ணுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும்/அல்லது அபராதம் விதிக்கப்பட்டது.

1960 களின் நடுப்பகுதியில்,  அபரிமிதமாக வளர்ந்த மக்கத்தொகையைக் கட்டுப்படுத்த, அரசாங்கம் கருக்கலைப்பு விவகாரத்தை ஆராய்ந்து, இந்தியாவிற்கு ஒரு சட்டம் தேவையா என்பதை முடிவு செய்யும்படி டாக்டர் சாந்திலால் ஷா தலைமையிலான குழுவை அமைத்தது.

கமிட்டி அறிக்கையின் அடிப்படையில், நாடாளுமன்றத்தில் மருத்துவ கருக்கலைப்பு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் 1971ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 1972 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் , ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தைத் தவிர, இந்தியா முழுமைக்கும், இச்சட்டம் அமலுக்கு வந்தது .

இதையும் படிங்க:    இந்தியாவில் பெண்களை விட 6 மடங்கு ஆண்கள் இதய நோயால் இறப்பு! - இந்த வயதினருக்கு பாதிப்பு அதிகம்!

மருத்துவக் கருவுறுதல் (MTP) சட்டம், 1971 சட்டம் , இரண்டு நிலைகளில் ஒரு மருத்துவப் பயிற்சியாளரால் கர்ப்பத்தை முடித்துக் கொள்ள அனுமதித்தது.

கருத்தரித்த பிறகு 12 வாரங்கள் வரை உள்ள கருவை  ஒரு மருத்துவரின் கருத்து அவசியம் பெற்று கருக்கலைப்பு செய்துக்கொள்ளலாம் .

குழந்தையின் வளர்ச்சி அல்லது குழந்தை பிறப்பு தாயின் உயிருக்கு ஆபத்து விளைக்கும்/ அல்லது மன ஆரோக்கியம் பாதிக்குமானால் 2 மருத்துவர்கள் ஆலோசனைப்படி 12 முதல் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்தது.

2017 ஆம் ஆண்டு நிலவரப்படி, பிறவி இதயக் குறைபாடு மற்றும் டவுன் சிண்ட்ரோம் போன்ற சில நிலைகளைக் கண்டறிவது பெரும்பாலும் குழந்தை வளர்ச்சி அடையும் பருவத்தில் இருப்பதால்  கருக்கலைப்புக்கான காலம் 24 வாரங்களாக நீட்டிக்கப்பட்டது.

2021 மீண்டும் இந்த சட்டம் திருத்தப்பட்டது. அதில் ஏற்கனவே இருந்த வரைமுறைகளோடு குழந்தை மற்றும் தாயின் உடல் மற்றும் மன நலத்தை கருத்தில் கொண்டு 24 வாரங்களுக்கு பிறகும் கருக்கலைப்பு செய்ய அனுமதித்தது. அதற்கு மெடிக்கல் போர்டின் அனுமதி பெறுவது அவசியம் என்று நிபந்தனையிட்டது.

திருமண பந்தத்தில் இல்லாதவர்களுக்கும் ...

திருமண உறவில் இருப்பவர்கள் அல்லது விதவை, மணமுறிவு செய்தவர்கள், பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளும் கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கப்பட்டது.

தற்போது 2022 செப்டெம்பரில் திருமணமாகாத ஒருமித்த உறவில் உள்ள பெண்களும் 20-24 வாரங்களுக்குள் கருக்கலைப்பு செய்லாம் என்று நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

யார் கருக்கலைப்பை செய்யலாம்?

பதிவு செய்யப்பட்ட மருத்துவ பயிற்சியாளரால் மட்டுமே இந்த நடைமுறையை மேற்கொள்ள முடியும் என்றும் அது நிபந்தனை விதித்தது. கருக்கலைப்பு ஒரு மருத்துவமனையிலோ அல்லது கிளினிக்கிலோ செய்யப்பட வேண்டும்.

சட்டத்தில் குறிப்பிட்ட வரையறை மீறி கருக்கலைப்பு செய்யப்பட்டால், கருக்கலைப்பு செய்துகொண்ட பெண்ணோடு சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் சிறை தண்டனை உண்டு.

கருக்கலைப்பு செய்ய தகுதியுடையவர் யார்?

  • கர்ப்பத்தின் தொடர்ச்சி தாயின் உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தினால், ஒரு பெண் கருக்கலைப்பு செய்யலாம்.
  • தாயின் கருப்பையிலேயே கருச்சிதைவு ஏற்பட்டால், அதாவது குழந்தை உள்ளே இறந்துவிட்டால் கருக்கலைப்பு செய்யலாம்.
  • பாலியல் வன்கொடுமையால் கரு உருவாகியிருந்தால் தகுந்த சட்ட நடவடிக்கைகளோடு கருக்கலைப்பு செய்து கொள்ளலாம்.

18 வயதிற்குட்பட்டவர்கள்...

ஒரு பெண் 18 வயதுக்கு உட்பட்டவராக இருந்தால், “போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாத்தல்) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும். பாலியல் செயல் அவரது சம்மதத்துடன் நடந்தாலும் வழக்குப் பதிவு செய்வது முக்கியம்..

இதையும் படிங்க: இந்தியாவில் 30% பெண்களுக்கு 21 வயதிற்குள் திருமணமாகிறது.. புதிய அறிக்கையில் தகவல்

மீறினால் தண்டனை:

இந்த கருக்கலைப்பு சட்டத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க 1994 ஆம் ஆண்டில், PCPNDT (முந்தைய கருத்தரிப்பு மற்றும் பிறப்புக்கு முந்தைய கண்டறியும் நுட்பங்கள்) சட்டம் இயற்றப்பட்டது. அதனால் கருக்கலைப்புகள் ஒரு பெண் அல்லது தம்பதியரின் விருப்பப்படி மேற்கொள்ளப்படுவதில்லை. சரியான காரணங்கள் இருந்தால் மட்டுமே செய்யப்படுகிறது.

ஒரு பெண் கருக்கலைப்பு செய்ய கணவனின் சம்மதம் தேவையில்லை என்றாலும், கணவன் ஒரு பெண்ணை கருக்கலைப்பு செய்ய கட்டாயப்படுத்த முடியாது. அத்தகைய வழக்கில், குடும்ப வன்முறை வழக்கு பதிவு செய்யப்படலாம். IPC 312/313 இன் கீழ், கருச்சிதைவு ஏற்படுத்தியதற்காக கணவர் மீது வழக்கு பதிவு செய்யலாம். குழந்தை வளர்வது தாயின் உடலில் என்பதால் அதற்கான பெரிய உரிமை, முடிவு எடுக்கும் திறன் தாயிடம் கொடுக்கப்படுகிறது.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Abortion, Law, Supreme court judgement