Home /News /explainers /

ஆதார் கார்டு ஃபோட்டோ உங்களுக்கு பிடிக்கலையா? கவலைய விடுங்க மாத்த ஒரு வழி இருக்கு!

ஆதார் கார்டு ஃபோட்டோ உங்களுக்கு பிடிக்கலையா? கவலைய விடுங்க மாத்த ஒரு வழி இருக்கு!

ஆதார் அப்டேட்

ஆதார் அப்டேட்

கவலை வேண்டாம். உங்கள் பிரச்சனைக்கு ஒரு எளிய வழி உள்ளது.

    ஆதார் கார்டில் இருக்கும் ஃபோட்டோவை நினைத்து கவலை கொள்பவர்களின் பிரச்சனைக்கு ஒரு வழியைத் தான் இங்கு தெரிந்து கொள்ள போகிறீர்கள்.

    ஆதார் அட்டை அவசியமான ஒன்றாக மாறி போன இந்த சூழலில் பெரும்பாலானோர் நினைத்து வருந்தும் ஒரு பிரச்சனை என்னவென்றால் அது ஆதார் கார்டில் இருக்கும் ஃபோட்டோ பற்றி தான். சிலருக்கு ஃபோட்டோ நன்றாக இல்லை என்ற கவலை, சிலருக்கு ஃபோட்டோ இளம் வயதில் இருக்கும் போது எடுத்ததால் இப்போது இருக்கும் முகத்தை வைத்து அடையாளம் கண்டுப்பிடிக்க பிரச்சனையாக இருக்கிறது என்ற கவலை, குழந்தைகளும் இதே சிக்கலுக்கு ஆளாகுகின்றன. பள்ளியில் சேர்க்கும் போது பல நேரங்களில் அவர்களின் புகைப்படம் பொருந்தாமல் போகிறது. இனி இதுப்போன்ற கவலை வேண்டாம். உங்கள் பிரச்சனைக்கு ஒரு எளிய வழி உள்ளது.

    ஆதாரில் பழைய புகைப்படம் இருந்தாலும், அல்லது தெளிவான புகைப்படம் இல்லை என்றாலும் உங்கள் படத்தை நீங்கள் மாற்றி கொள்ளலாம். இந்த எளிதான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் உங்கள் ஆதார் அட்டையில் உங்கள் பழைய ஃபோட்டோவை நீங்கள் மாற்றலாம். இனியும் பழைய ஆதார் கார்டை வைத்துக் கொண்டு சிரமப்பட வேண்டாம். இதை செய்வதும் மிகவும் எளிது. நொடியில் முடிந்துவிடும். குறிப்பாக இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை.நேராக ஆதார் சேர்க்கை மையம் செல்வதன் மூலம் உங்கள் பழைய ஆதார் புகைப்படத்தை நீங்கள் மாற்ற முடியும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    முதலில் உங்கள் ஆதார் கார்டை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். பின்பு, அதை எடுத்துக் கொண்டு ஆதார் சேர்க்கை மையத்திற்குச் செல்லுங்கள். அங்கு நிர்வாகி ஆதார் கார்டில் இருக்கும் ஃபோட்டோவை மாற்ற ஒரு படிவத்தை அளிப்பார். அதை நிரப்பி அதற்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும். இப்போது UIDAI அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நிர்வாகி, புகைப்படத்தை கிளிக் செய்வார்கள். இப்போது உங்களுடைய புதிய படம் ஆதார் அட்டையில் பதிவேற்றப்படும்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Sreeja Sreeja
    First published:

    Tags: Aadhar, News On Instagram

    அடுத்த செய்தி