• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வாங்கி இருக்கீங்களா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வாங்கி இருக்கீங்களா? அப்ப இந்த தகவல் உங்களுக்கு தான்!

ஆதார் அப்டேட்

ஆதார் அப்டேட்

ஆதாரில் அறிவிக்கப்படும் அப்டேட் குறித்தும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்

  • Share this:
    குழந்தைகளுக்கு ஆதார் கார்டு வாங்கி வைத்திருக்கும் பெற்றோரா நீங்க? இந்த அப்டேட் உங்களுக்கு தான் தெரிஞ்சி வச்சிக்கோங்க.

    ஆதார் கார்டு இன்றைய தேதியில் நம் கைகளில் கட்டாயம் இருக்க வேண்டிய ஆவணமாக மாறி விட்டது. பர்ஸ்களில் பணம் இருப்பது போல் ஆதார் கார்டும் கையில் இருக்க வேண்டும். எங்கு போனாலும் அடையாள கார்டாக ஆதார் கேட்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஆதாரில் அறிவிக்கப்படும் அப்டேட் குறித்தும் அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் சிக்கல் தான்.

    காரணம், திடீரென்று ஆதார் கார்டை ஆவணமாக சமர்பிக்கும் போது அது செயல்பாட்டில் இல்லை அல்லது அப்டேட் செய்யப்படவில்லை என தெரியும் போது தேவையில்லை அலைச்சல் மற்றும் குழப்பமே மிஞ்சும். இதை தவிர்க்க முன்பே ஆதார் கார்டில் அறிவிக்கப்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.அந்த வகையில் இங்கு நாம் பார்க்க போவது குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் அறிவிக்கப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து தான். குழந்தைகளுக்கான ஆதார் கார்டில் சம்பந்தப்பட்ட குழந்தையின் பயோ மெட்ரிக் விவரங்கள் 5 வயதில் அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி அப்டேட் செய்யவில்லை என்றால் அது செயலிழந்த ஆதார் கார்டாக காட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    அதாவது, தற்போது பிறந்த 9 மாதம் முதலே குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கப்படுகிறது. பிறப்பு சான்றிதழ் வாங்கினால் போதும் அதை வைத்து குழந்தைகளுக்கு ஆதார் எடுத்துவிடலாம். இப்படி பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் எடுக்கும் போது பல சமயங்களில் கைரேகை மற்றும் கருவிழி ரேகை அச்சு போன்றவை பதிவு செய்யப்படுவதில்லை. அதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. 5 வயது முழுமையடைந்த பின்பு தான் இந்த பயோ பதிவுகள் குழந்தைகள் ஆதார் கார்டில் சேர்க்கப்படுகின்றன. இந்நிலையில் 5 வயது முடிந்தவுடன் கட்டாயம் குழந்தைகளின் ஆதார் கார்டில் இந்த பயோ பதிவுகளை செய்து ஆதார் கார்டை புதுபிக்க வேண்டும். குழந்தைகளுக்கு 5 வயது கடந்த பின்பும் பழைய ஆதார் கார்டை பயன்படுத்தினால் அது செயலிழந்ததாக காட்டப்பபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sreeja Sreeja
    First published: