ஹோம் /நியூஸ் /செய்தி விளக்கம் /

ஆதார் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஆதார் நம்பர் மூலம் பணம் அனுப்பலாம்.. இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

ஆதார்

ஆதார்

ஆதார் எண்ணை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்ய அவரது 12 டிஜிட் யுனிக் ஆதார் நம்பரை என்டர் செய்து verify பட்டனை அழுத்த வேண்டும்.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :

  ஆதார் நம்பரை பயன்படுத்தி BHIM App யூஸர்கள் பணம் அனுப்பலாம் என்று UIDAI கூறி இருக்கிறது.

  டிஜிட்டல் உலகம் அபரிதமான வளர்ச்சி பெற்றுள்ள இந்த நவீன காலத்தில் பணபரிவர்த்தனைகள் என்பது டிவைஸ்களை கொண்டு ஒரு நொடியில் செய்ய கூடிய எளிதான விஷயமாக மாறி விட்டது. கோவிட் தொற்று இந்தியாவில் டிஜிட்டல் நிதி பரிவர்த்தனைகளுக்கு பெரிய ஊக்கத்தை அளித்துள்ளது. கல்வி கட்டணத்தில் இருந்து மளிகை சாமான்கள் வாங்குவது மற்றும் பில்களை செட்டில் செய்வது வரை அனைத்தும் டிஜிட்டல் மயமாகிவிட்டது. டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை மேலும் எளிதாக்க பல்வேறு நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.

  பொதுவாக பேமெண்ட்ஸ் ஆப்ஸ்கள் மூலம் ஒருவருக்கு பணம் அனுப்ப வேண்டும் என்றால் பணத்தை பெரும் குறிப்பிட்ட நபர் பேங்க் அக்கவுண்ட்டுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் அல்லது UPIஅட்ரஸை கொண்டிருக்க வேண்டியுள்ளது. எனினும் தற்கால டிஜிட்டல் உலகிற்குள் முழுவதும் நுழையாமல் இன்னும் பல மக்கள் நாட்டில் இருக்கின்றனர். அவர்களிடம் ஸ்மார்ட்ஃபோன் அல்லது யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் எனப்படும் UPI id இல்லாததால் அவர்களுக்கு பணம் அனுப்புவது சிக்கலாகிறது

  இதனிடையே ஸ்மார்ட் போன் அல்லது UPI id இல்லாதவர்களுக்கும் கூட அவர்களது ஆதார் நம்பரை பயன்படுத்தி BHIM App யூஸர்கள் பணம் அனுப்பலாம் என்று UIDAI கூறி இருக்கிறது. நாட்டில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு National Payments Corporation of India-வால் உருவாக்கப்பட்டு பயன்பாட்டில் இருக்கும் பேமெண்ட் ஆப் BHIM ஆகும். UIDAI-ன் அறிவிப்பு படி, ஆதார் நம்பரை பயன்படுத்தி பணம் அனுப்புவதற்கான ஆப்ஷன் BHIM App-ல் உள்ள பயனாளியின் முகவரியில் (beneficiary address) தெரியும். நீங்கள் BHIM யூஸர் என்றால் ஆதார் நம்பரை பயன்படுத்தி பணம் அனுப்புவது எப்படி என்பதை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்..

  BHIM-ல் ஆதார் எண் பயன்படுத்தி பணம் அனுப்பும் முறை..

  நீங்கள் ஒரு BHIM யூஸராக இருந்தால், பணம் அனுப்பவேண்டிய நபரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி பணபரிமாற்றம் செய்ய அவரது 12 டிஜிட் யுனிக் ஆதார் நம்பரை என்டர் செய்து verify பட்டனை அழுத்த வேண்டும். UIDAI வழங்கியுள்ள தகவலின் படி இதன் பின், ஆதார் லிங்கிங் மற்றும் பயனாளிகளின் முகவரியை சிஸ்டம் சரிபார்க்கும் மற்றும் யூஸர் அவருக்கு பணத்தை அனுப்ப முடியும். பணம் பெறுபவர்களின் வங்கி கணக்கு எண் மற்றும் வங்கியின் IFSC ஆகியவற்றை உள்ளிடுவதற்கு மாற்றாக இது பயனுள்ளதாக இருக்கும்.

  DBT/ஆதார் அடிப்படையிலான கிரெடிட்களை பெற ஒருவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெறுநரின் வங்கிக் கணக்கு ஒருவருக்குப் பணம் மாற்றப்படும்போது அதில் வரவு வைக்கப்படும். பயோமெட்ரிக் அடிப்படையிலான ஆதார் பே ஆப்ஷனையும் BHIM பெற்றுள்ளது. Aadhaar Pay POS பயன்படுத்தும் வணிகர்களுக்கு, ஆதார் எண் மற்றும் கைரேகை மூலம் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தலாம்.

  ஒருவேளை ஒரு நபருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிகளில் கணக்குகள் இருந்தால் மற்றும் அனைத்து கணக்குகளும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால், அனைத்து கணக்குகளும் டிஜிட்டல் பேமெண்ட்ஸிற்கு பயன்படுத்தப்படலாம். ஆதார் பேஸ்டு பேமெண்ட்ஸின் போது, நீங்கள் உங்களது எந்த வங்கி கணக்கிலிருந்து பணம் செலுத்த விரும்புகிறீர்கள் என்பதை தேர்வுசெய்ய விருப்பம் வழங்கப்படும்.

  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

  Published by:Sreeja
  First published:

  Tags: Aadhar