ஆதார் கார்ட்டை பெறுவது நீங்கள் நினைப்பது போல மிக கடினமான விஷயம் இல்லை. இதை ஒரு சில நிமிடங்களிலே ஆன்லைன் மூலம் நீங்கள் பெற்று விடலாம்.
இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் முக்கிய அடையாளமாக கருதப்படுவது ஆதார் கார்டு தான். புதிதாக வங்கி கணக்கு தொடங்குவது முதல் தற்போது கொரோனா தடுப்பூசி போடுவது வரை உங்கள் கையில் ஆதார் கார்டு இருப்பது அவசியம். அதே போன்று எல்லா வித முக்கிய ஆவணங்களிலும் இந்த ஆதார் கார்டை சேர்க்க வேண்டும் என மத்திய அரசு கூறி வருகிறது. ஆதாரில் உள்ள 12 இலக்க அடையாள எண் மிக முக்கியமானது. உங்கள் ஆதார் கார்டில் உங்களின் கை ரேகை, கண்ணின் கருவிழி விவரம், உங்கள் பெயர், பிறந்த தேதி, முகவரி போன்ற முக்கிய தகவல்கள் இதில் இடம் பெற்றிருக்கும்.
சிலர் தவறுதலாக ஆதாரை தொலைத்திருப்போம். ஆனால் அதை மீண்டும் பெறாமல் கண்டு கொள்ளாமல் விட்டிருப்போம். இப்படி செய்வது நமக்கு பல பிரச்சனைகளை உண்டாக்கும். எனவே ஆதார் கார்டு போன்ற எந்த ஆவணங்கள் தொலைந்து போனாலும் உடனே அவற்றை திரும்ப பெற்று விடுங்கள். உங்களின் தொலைந்து போன ஆதாரை மீண்டும் பெறுவதற்கான வழியை இந்த பதிவில் அறியலாம்.
புதிய ஆதார் கார்ட்டை பெறுவது நீங்கள் நினைப்பது போல மிக கடினமான விஷயம் இல்லை. இதை ஒரு சில நிமிடங்களிலே ஆன்லைன் மூலம் நீங்கள் பெற்று விடலாம். இதற்கு ஆதார் கார்ட்டில் நீங்கள் பதிவு செய்த அந்த மொபைல் நம்பர் உங்களிடம் இருந்தால் மட்டும் போதும். அப்படி இல்லையென்றால் ஆஃப்லைன் மூலமும் நீங்கள் இதை பெற்று கொள்ளலாம்.
தொலைந்து போன
ஆதாரை ஆன்லைனில் பெற முதலில் உங்கள் கணினியில் UIDAI (https://resident.uidai.gov.in/) இணைய தளத்திற்கு செல்ல வேண்டும். அடுத்து, சிறிது கீழே ஸ்க்ரோல் செய்து 'ஆதார் சர்வீஸ்' என்கிற ஆப்ஷனை கிளிக் செய்யவும். இந்த பக்கத்தில் 'Recover Lost or Forgotten EID/UID' என்ற டேப்க்குள் செல்லவும்.
இதில் ‘Select Option’ என்கிற பிரிவிற்கு கீழ் ‘Aadhaar No (UID)’ என்பதை தேர்வு செய்ய வேண்டும். இதன் பிறகு உங்களின் முழு பெயர், மொபைல் நம்பர் மற்றும் இமெயில் முகவரியை பதிவு செய்யவும். இது முடிந்ததும், 'கேப்சா'வை சரியாக நிரப்புங்கள். அடுத்து, ‘Send OTP’ பட்டனை கிளிக் செய்யுங்கள். உங்கள் மொபைல் நம்பருக்கு 6 இலக்க OTP வரும், அதை என்டர் செய்க. இப்போது உங்களின் ஆதார் கார்ட்டை உங்கள் இமெயில் முகவரியில் பெற்று கொள்ளலாம்.
ஆதார் கார்ட்டில் நீங்கள் பதிவு செய்த மொபைல் நம்பர் உங்களிடம் இல்லையென்றால் ஆஃப்லைன் மூலம் நீங்கள் ஆதாரை பெறலாம். இதற்கு கூடுதலாக நீங்கள் சிலவற்றை செய்தாக வேண்டும். UIDAI நடத்தி வரும் ஆதார் சேவா கேந்த்ரா (Aadhaar Seva Kendra) மையத்தை அணுகி உங்களின் ஆதாரை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளலாம். இந்த வசதி தற்போது ஆதார் சேவா கேந்த்ராவில் மட்டுமே உள்ளது. விரைவில் வங்கிகள், தபால் அலுவலகங்கள், பிஎஸ்என்எல் மையங்கள் ஆகியவற்றிலும் வரவுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மீண்டும் பிரிண்ட் செய்யப்பட்ட ஆதார் கார்டு உங்கள் வீட்டு முகவரிக்கு 15 நாட்களுக்கும் வந்துவிடும்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.