ஆதார் தொலைந்தால் நீங்கள் முதலில் பண்ண வேண்டியது... ஆன்லைனில் லாக் செய்வது!

ஆதாரை லாக் செய்வது

ஆதாரைப் பயன்படுத்தாத சமயங்களில் ஆதார் அட்டையை லாக் செய்யலாம்

 • Share this:
  ஆதார் தொலைந்தால் நீங்கள் உங்கள் பாதுகாப்பிற்காக செய்ய வேண்டியது  ஆன்லைனில் லாக் செய்வது தான். அது எப்படி செய்வது என தெரியுமா?

  ஆதார் கார்டு அனைவரிடமும் இருக்க வேண்டிய முக்கியமான ஆவணமாக மாறிவிட்டது. இன்றைய தினம் கோயிலில் சாமி கும்மிட சென்றால் கூட ஆதார் கட்டாயம். மக்களின் அடையாள அட்டையாகவும் ஆதார் உள்ளது. இப்படிப்பட்ட முக்கியமான ஆவணத்தை பாதுகாப்பாக வைத்திருப்பது நமது கடமை. ஆதார் கார்டை வைத்து பல்வேறு நூதன மோசடிகளை செய்யலாம். வங்கி கணக்கு தொடங்கி பான் கார்டு எல்லாவற்றிலும் ஆதாரை இணைத்துள்ளோம். அதனால் ஆதாரை எப்போதுமே பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். ஒருவேளை தொலைந்தாலும் அதனால் உங்களுக்கு வேறு எந்த பிரச்சனையும் வராமல் இருக்க சில பாதுகாப்பு விஷயங்களையும் செய்திருக்க வேண்டும். அதில் ஒன்று தான் ஆன்லைனில் லாக் செய்வது.

  UIDAI அறிமுகப்படுத்திய மிக முக்கியமான திட்டங்களில் இதுவும் ஒன்று. ஒருவர் ஆன்லைனில் தனது ஆதார் கார்டு தொலைந்து விட்டால் அதை லாக் மற்றும் அன் லாக் செய்யலாம் தெரியுமா? இந்த வசதி மோசடி சம்பவங்களைத் தடுக்கும். தொலைந்து போனால் லாக் செய்வது போல எந்தவொரு சேவைக்கும் நீங்கள் ஆதாரைப் பயன்படுத்தாத சமயங்களில் ஆதார் அட்டையை லாக் செய்யலாம். இதுப்போன்ற வசதிகள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பெருமளவில் பாதுகாக்கும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  சரி உங்கள் ஆதாரை லாக் மற்றும் அன்லாக் செய்வது எப்படி என தெரிந்துகொள்ளுங்கள். அதற்கு முதலில் நீங்கள் https://uidai.gov.in/ என்ற இணையத்திற்குள் செல்ல வேண்டும். அதில் தோன்றும் ஆதார் சேவைகளுக்கு கீழ் இருக்கும் ’Lock & Unlock’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். பின்பு உங்களுடைய UID நம்பர், பெயர், பின் கோடு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்து Send OTP’ என்பதை கிளிக் செய்து Submit கொடுக்க வேண்டும். அதாவது உங்களுடைய ஆதார் தொலைந்து விட்டால் இப்படி செய்தாலே போதும் ஆதார் எண் லாக் செய்யப்பட்டுவிடும். யாரும் பயன்படுத்த முடியாது. ஒருவேளை ஆதார் கிடைத்து விட்டாலும் கூட ஆதார் வலைப்பக்கத்தில் சென்று Unlock பட்டனை கிளிக் செய்து send OTP மற்றும் submit கொடுத்தால் போதும் அன்லாக் ஆகிவிடும்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: