• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடித்து தடுக்க இதோ வழி!

ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுகிறதா? கண்டுபிடித்து தடுக்க இதோ வழி!

Aadhar card

Aadhar card

ஒருவரின் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார், அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே பல இடங்களிலும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

  • Share this:
ஆதார் அட்டை, இந்திய குடிமகன் ஒவ்வொருக்கும் இருக்க வேண்டிய பிரதானமான ஆவணமாக உள்ளது. அரசு சேவைகள் உள்ளிட்ட அனைத்திலும் ஆதார் அட்டையே முக்கிய ஆவணமாக கேட்கப்படுகிறது. உதாரணமாக, வங்கிக் கணக்கு, வேலைகளுக்கு பதிவு செய்தல், தேர்வு விண்ணப்பம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், இது பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவமனையில் நோயாளிகளை அனுமதிப்பது முதல் வருங்கால வைப்பு நிதியில் பணம் எடுப்பது வரையிலும், ஆதார் அட்டை பிரதான ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. அரசு சார்ந்த துறைகளில் மட்டுமல்லாது அரசு சாரா, தனியார் துறை சேவைகளுக்கும் ஆதார் எண் கட்டாயமாக கேட்கப்படுகிறது. சிறு, குறு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது ஆதார் அட்டையை கட்டாயமாக வாங்கிக் கொள்கின்றனர். இதனால், ஒருவரின் முக்கிய ஆவணமாக இருக்கும் ஆதார், அவருடைய ஒப்புதல் இல்லாமலேயே பல இடங்களிலும் பயன்படுத்த வாய்ப்புகள் உள்ளன.

மோசடியாளர்களின் கைகளில் கிடைக்கும் ஆபத்தும் அதிகம் உள்ளது.
இதனால், ஆதார் அட்டை பயன்பாடு குறித்து அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவேளை உங்கள் ஆதார் அட்டை தவறாக பயன்படுத்தப்படுவதாக இருந்தால், அதனை நீங்கள் கண்டுபிடித்துவிடலாம். ஒருவரின் ஆதார் அட்டை பயன்பாடு குறித்த தகவல்கள் UIDAI இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும். இந்த தளத்துக்கு சென்று நீங்கள், உங்கள் ஆதார் அட்டை எங்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

Also read: சவுதி அரேபியாவுடன் மீண்டும் துளிர்க்கும் நட்பு.. பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்!

1. இதனை நீங்கள் செய்ய முதலில் UIDAI -ன் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும்.

2. அதில், ஆதார் சேவைகளுக்குச் (Aadhaar Services) சென்று, ஆதார் அங்கீகார வரலாற்றைத் (Aadhaar Authentication History) தேர்ந்தெடுக்கவும்.

3. அதன் பிறகு உங்கள் ஆதார் எண்ணை பதிவிட வேண்டும். இதனை செய்தவுடன், மெனுவிலிருந்து OTP -ஐ உருவாக்கு என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. அப்போது, ஆதாரில் இருக்கும் மொபைலுக்கு OTP வரும். அந்த ஓ.டி.பியை ஆன்லைனில் கேட்கும் இடத்தில் பதிவிட வேண்டும்.

Also read:   மீட்கப்படுகிறதா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? இனிப்பான செய்தி சொன்ன விமானப்படை அதிகாரி!

5. இதனை நீங்கள் செய்தவுடன் உங்கள் ஆதார் எண்ணின் வரலாறு திரையில் காண்ப்பிக்கப்படும்.

6. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் ஆதார் எண் மொபைல் எண்ணுடன் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இத்தகைய வசதிகளை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

உங்களுடைய ஆதார் சந்தேகத்துக்குரிய வகையில் பயன்படுத்துவதை நீங்கள் கண்டறிந்தால், UIDAI - வாடிக்கையாளர் சேவை மைய எண் 1947 -ஐ தொடர்பு கொள்ளுங்கள். அங்கு, உங்களின் புகாரை பதிவு செய்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். help@uidai.gov.in என்ற இமெயில் முகவரி வழியாகவும் உங்களின் புகாரை பதிவ செய்யலாம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: