உங்கள் ஆதார் அட்டையில் ஆன்லைனிலேயே முகவரியை மாற்றும் வழிகள்!

ஆதார்

உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்

  • Share this:
ஆதார் அட்டை அனைத்து வகையான தேவைகளுக்கும் ஒரு அத்தியாவசிய ஆவணமாகும். வங்கி பரிவர்த்தனைகள் அல்லது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் எதுவாக இருந்தாலும், நீங்கள் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும். புதிய தொலைபேசி இணைப்பைப் பெறுவது முதல் உங்கள் வருமான வரியைத் தாக்கல் செய்வது வரை அனைத்தும் இப்போது ஆதார் உடன் இணைக்கப்பட்டுள்ளன. உங்கள் விவரங்களை சரிபார்க்க ஆதார் கேட்கப்படும். எனவே உங்கள் ஆதார் அட்டையில் அனைத்து விவரங்களையும் சரியாக குறிப்பிடுவது முக்கியம்.

உங்கள் ஆதார் அட்டையில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை ஆதார் சேவை மையத்திற்கு சென்று திருத்தி கொள்ள முடியும். உங்கள் ஆதார் அட்டையில் உள்ள பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை ஆன்லைனில் மாற்றி கொள்ளலாம். ஆனால் முகவரியை மாற்றுவதில் சிக்கல் உள்ளது. இந்த பிரச்சினை பெரும்பாலும் வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்கு வருகிறது. ஏனெனில் வீட்டை மாற்றிய பின் ஆதார் அட்டையில் உள்ள முகவரியை மீண்டும் மீண்டும் மாற்றுவது கடினமாக இருக்கிறது. இதனை கருத்தில் கொண்டு, UIDAI ஒரு சிறப்பு வசதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் இப்போது வீட்டில் இருந்தபடியே தங்கள் முகவரியைப் புதுப்பிக்க முடியும். மேலும் ஆன்லைனில் ஆதார் அட்டையில் உங்கள் முகவரியைப் புதுப்பிக்க வரம்பு இல்லை.

உங்கள் ஆதார் ஆன்லைனில் முகவரியைப் புதுப்பிக்க விரும்பினால், UIDAI இன் போர்ட்டலில் https://uidai.gov.in/ உள்நுழைந்து அதைச் செய்யலாம்.

உங்கள் முகவரியைப் புதுப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன, சொந்த வீட்டில் வசிப்பவர்கள் தங்களது முகவரியில் ஏதேனும் தவறு இருந்தால் திருத்தி கொள்ளலாம், அதே நேரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்களும் தங்களது புதிய முகவரியை எளிமையாக ஆன்லைனிலேயே மாற்றி கொள்ளலாம்.

இதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

1. முதலில் ssup.uidai.gov.in வலைத்தளத்தில் உள்நுழைந்து முகப்பு பக்கத்தில் கிடைக்கும் ஆதார் அப்டேட் என்பதை கிளிக் செய்யவும்.

2. இப்போது தோன்றும் திரையில் Address Request (Online)-ஐ கிளிக் செய்யவும். இதைச் செய்தபின் புதிய விண்டோ திறக்கும். அதில் Update Address என்பத்தை கிளிக் செய்யவும்.

3. பின்னர் ஆதார் அட்டை எண்ணை உள்ளிட்டு கேப்ட்சா மற்றும் ஓடிபி ஆகியவற்றை என்டர் செய்து லாக் இன் செய்யவும். இதற்குப் பிறகு, அங்கு கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

4. உங்கள் வீட்டு முகவரி பக்கத்தை ஸ்கேன் செய்து அப்லோடு செய்து Submit பொத்தானை அழுத்தவும்.

சரியான முகவரி ஆதாரம் இல்லாத யூசர்கள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்கள் வாடகை ஒப்பந்தத்தை வைத்து தங்கள் முகவரியை மாற்றி கொள்ளலாம்.

இந்த செயல்பாட்டில் உங்களுக்கு வாடகை ஒப்பந்தம் (Rent Agreement) தேவைப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த ஒப்பந்தத்தில் உங்கள் பெயர் எழுதப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பத்தின் போது, ​​வாடகை ஒப்பந்தத்தை ஸ்கேன் செய்து அதன் PDF நகலை பதிவேற்ற வேண்டும். நீங்கள் ஆன்லைனில் அப்ளை செய்த சில நாட்களிலே உங்கள் முகவரின் செய்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரும்.
Published by:Arun
First published: