2009-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தின்போது ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதார் கார்டு என்பது கைரேகை, கருவிழி பதிவு போன்ற உடல் அங்கங்கள் சார்ந்த பதிவுகளுடன் வழங்கப்படும் ஒரு அடையாள அட்டையாகும். காங்கிரஸ் அரசில் ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தாலும், பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு திட்டங்களுக்கும் ஆதார் கார்ட்டை கட்டாயமாக்கிவருகிறது. எனவே, அரசின் திட்டங்களின் பலனைப் பெற ஆதார் கார்டு என்பது ஒவ்வொருவருக்கும் அவசியமான ஒன்றாக இருந்துவருகிறது.
ஆனால், ஆதார் கார்டில் இருக்கும் ஏதேனும் தகவல்களை மாற்றுவது பலருக்கு சிரமமான ஒன்றாகவே இருந்துவருகிறது. பெயர் மாற்றம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை நாமே UIDAI என்ற இணையத்துக்கு சென்று மாற்ற முடியும். இருப்பினும், இணைய வசதி இல்லாதவர்களுக்கு இது சிரமமான காரியமாகவே இருந்துவருகிறது. இந்தநிலையில், செல்போன் குறுஞ்செய்தி மூலமே இந்த மாற்றங்களை செய்யும் எளிய வழிமுறையை யு.ஐ.டி.ஏ.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.எம்.எஸ் மூலம் ஆதார் சேவைகள் என்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சேவையில் பல சேவைகள் கிடைக்கின்றன. ஆதார் இணையத்தில் பதிவு செய்துள்ள மொபைல் எண்ணிலிருந்து 1947 என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் பல சேவைகளைப் பெற முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆதார் விர்ச்சுவல் ஐ.டி பெறலாம்:
ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆதார் எண்ணுக்கு பதிலாக பெறக்கூடியது விர்ச்சுவல் ஐ.டி எனப்படும் 16 இலக்க எண். இந்த எண்ணை பெறுவதற்கு GVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை டைப் செய்து 1947 என்று எண்ணுக்கு பதிவு செய்யப்பட்ட செல்போனிலிருந்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
ஆதார் விர்ச்சுவல் ஐ.டியை மீட்டெடுக்கலாம்:
விர்ச்சுவல் ஐ.டியை மீட்டெடுப்பதற்கு RVID என்று டைப் செய்து இடைவெளி விட்டு உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்களை டைப் செய்து பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஆதார் எண் மூலம் ஓ.டி.பி:
GETOTP என்று டைப் செய்து இடைவெளி விட்டு ஆதார் எண்ணின் கடைசி நான்கு எண்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்..
விர்ச்சுவல் ஐ.டி மூலம் ஓ.டி.பி:
GETOTP என்று டைப் செய்து இடைவெளி விட்டு விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு எண்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.
ஆதார் கார்டை லாக் செய்தல்:
உங்கள் ஆதார் கார்டை லாக் செய்யவேண்டுமெனில் முதலில் நீங்கள் விர்ச்சுவல் ஐ.டியைப் பெறவேண்டும். பிறகு இரண்டு கட்ட எஸ்.எம்.எஸ் வழிமுறை மூலம் ஆதார் கார்ட்டை லாக் செய்யலாம்.
முதல்படி: முதலில் GETOTP என்று ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கங்களை டைப் செய்து குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும்.
இரண்டாம் படி: ஓடிபி எண்ணைப் பெற்ற உடனையே அடுத்த குறுஞ்செய்தியை அனுப்ப வேண்டும். LOCKUID என்று இடைவெளி விட்டு ஆதார் எண்ணின் கடைசி ஆறு எண்கள் டைப் செய்து இடைவெளி விட்டு ஆறு இலக்க ஓடிபி எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
ஒருவேளை ஒரே மொபைல் எண் இரு ஆதார் எண்களுக்கு கொடுக்கப்பட்டு, ஆதாரின் கடைசி நான்கு எண்களும் ஒரே எண்ணாக இருந்தால் கடைசி எட்டு ஆதார் எண்கள் மற்றும் ஆறு இலக்க ஓடிபி எண்ணை அனுப்ப வேண்டும்.
ஆதார் கார்டை அன்லாக் செய்தல்:
GETOTP என்று டைப் செய்து இடைவெளிவிட்டு கடைசி விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண்ணை டைப் செய்து அனுப்ப வேண்டும்.
பின்னர், UNLOCKUID என்று டைப் செய்து விர்ச்சுவல் ஐ.டியின் கடைசி ஆறு இலக்க எண் மற்றும் ஆறு இலக்க ஓடிபியை டைப் செய்து அனுப்பவேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Aadhaar card