முகப்பு /செய்தி /Explainers / அவசியமான தகவல் : aadhaar card eSign செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

அவசியமான தகவல் : aadhaar card eSign செய்வது எப்படி? முழு விவரம் இதோ!

ஆதார்

ஆதார்

aadhaar card : eSign எனப்படும் மின்னணு கையொப்பம் அனைவருக்கும் வசதியான ஒன்றாக இருக்கிறது

  • 1-MIN READ
  • Last Updated :

நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் UIDAI வழங்கிய ஆதார் அட்டை தற்போது மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

ஏனெனில் இது ஒவ்வொரு அதிகாரபூர்வ மற்றும் வங்கி தொடர்பான பணிகளுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. இந்தியர்களுக்கு கட்டாய ஆவணமாகிவிட்ட ஆதார் வெறும் அடையாள ஆவணமாக மட்டுமின்றி அனைத்து அரசு மற்றும் நிதி தொடர்பான பரிவர்த்தனைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.20 மாதங்களுக்கும் மேலாக அச்சுறுத்தி வரும் கோவிட் காரணமாக காகித ஆவணமாக இருக்கும் பல டிஜிட்டலாக மாற வேண்டிய நிர்பந்தம் தற்போது ஏற்பட்டு இருக்கிறது. அனைவரும் தங்களுடைய PAN கார்டு மற்றும் ஆதார் கார்டின் டிஜிட்டல் காப்பிகளை தங்களிடம் வைத்திருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டு உள்ளது. மேலும் அனைத்தும் டிஜிட்டல் மயமாகி வருவதால் குறிப்பாக ஆன்லைனில் சில பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது உங்கள் ஆதார் கார்டின் டிஜிட்டல் காப்பியை வைத்திருப்பது நல்லது. உங்கள் ஆதார் எண்ணை டிஜிட்டல் முறையில் ஆன்லைனில் பயன்படுத்தும் போது, உங்கள் ஆதார் eSign சரிபார்க்கப்படுவது மிகவும் முக்கியம்.

ஆதார் வைத்திருப்பவர் பயோமெட்ரிக்/ ஒன்டைம் பாஸ்வேர்ட் அங்கீகாரம் மூலம் ஆன்லைனில் ஒரு ஆவணத்தில் கையெழுத்திடலாம். இது பற்றி கூறி இருக்கும் உரிமம் பெற்ற சான்றளிக்கும் ஆணையமான NSDL e-Governance Infrastructure Limited, eSign என்பது ஒரு ஆன்லைன் மின்னணு கையொப்ப சேவை. இது ஆதார் வைத்திருப்பவர் ஒரு ஆவணத்தில் டிஜிட்டலில் கையொப்பமிட உதவும் என குறிப்பிட்டுள்ளது.

ஆதார் eSign-ன் நன்மைகள்..

eSign எனப்படும் மின்னணு கையொப்பம் அனைவருக்கும் வசதியான ஒன்றாக இருக்கிறது மற்றும் ரெக்கார்ட் மேனேஜ்மென்டை எளிதாக்குகிறது. பயன்பாட்டிற்குப் பிறகு keys-கள் உடனடியாக அழிக்கப்படுவதால், இந்த ஆன்லைன் சேவை பாதுகாப்பானது. நேரத்தை மிச்சப்படுத்தி செலவினங்களை குறைக்கிறது. மேலும் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. காகித விரயத்தை தடுப்பதால் சுற்றுச்சூழல் நட்பு விஷயமாக இருக்கிறது. தொலைநிலை அணுகல் மற்றும் மேம்பட்ட வசதியை யூஸர்களுக்கு அளிக்கிறது.

உங்கள் ஆதாரில் eSign செய்வது எப்படி?

* https://uidai.gov.in/ அல்லது https://eaadhaar.uidai.gov.in வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும்.

* வெப்சைட்டின் ஹோம்பேஜிற்கு வந்தவுடன் 'Validity Unknown' ஐகானை ரைட் க்ளிக் செய்யவும்.

* இப்போது சிக்னேச்சர் வெரிஃபிகேஷன் ஸ்டேட்டஸ் விண்டோ பாப்அப் ஆகும்.

* 'Signature properties'-ஐ க்ளிக் செய்ய வேண்டும்.

* அடுத்து, 'Show certificate' என்ற ஆப்ஷன் ஸ்கிரீனில் தோன்றும். இப்போது அதை கிளிக் செய்யவும்.

* NIC Sub-CA for NIC 2011, National Informatics Centre என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

* பின்னர் 'Trust' டேபிற்கு சென்று Add to Trusted Identity என்ற ஆப்ஷனை தேர்வு செய்யவும்.

* படிகளைப் பின்பற்றி, 'கையொப்பத்தை சரிபார்க்கவும்' விருப்பத்தை கிளிக் செய்யவும்

* இப்போது மேலும் படிகளைப் பின்பற்றி, 'Validate signature' ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

First published:

Tags: Aadhaar card