ஹோம் /நியூஸ் /Explainers /

Explainer: ஃபோர்ட்நைட் கேமரான 8 வயது சிறுவன் - ரூ. 23 லட்சத்தில் ஒப்பந்தம் கையெழுத்து!

Explainer: ஃபோர்ட்நைட் கேமரான 8 வயது சிறுவன் - ரூ. 23 லட்சத்தில் ஒப்பந்தம் கையெழுத்து!

ஜோசப் டீன்

ஜோசப் டீன்

கலிபோர்னியாவை சேர்ந்த ஜோசப் டீன் என்ற இளம் பள்ளி சிறுவன் நான்கு வயதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டை விளையாடி வருகிறார்.

  • News18
  • 2 minute read
  • Last Updated :

நீங்கள் எட்டு வயதாக இருந்தபோது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? ஒருவேளை பள்ளிக்கு செல்வது அல்லது விடுமுறை நாட்களாக இருந்தால் டிவி பார்த்து கொண்டு இருந்திருப்போம். நீங்கள் நண்பர்களுடன் விளையாடி இருக்கலாம் அல்லது சமீபத்திய வீடியோ கேம் விளையாட சிறிது நேரம் செலவிடலாம். ஆனால் ஒரு எட்டு வயது சிறுவன், தொழில் ரீதியாக கேம்களை விளையாடுகிறார். ஆனால் நேரத்தை கழிக்க அல்ல, வீடியோ கேம் பிளேயராக விளையாட போனஸாக $33,000 அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ. 23 லட்சத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார்.

கலிபோர்னியாவை சேர்ந்த ஜோசப் டீன் என்ற இளம் பள்ளி சிறுவன் நான்கு வயதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டை விளையாடி வருகிறார். அவர் தனது வாழ்நாளின் பாதியை விளையாடியே கழித்துள்ளார். இதனையடுத்து அவரது திறமையைக் கவனித்த ஃப்ளெட்கெலிங் இ-ஸ்போர்ட்ஸ் அணி ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு , தனது 33 வீரர்களில் ஒருவராக ஜோசப் டீனை ஒப்பந்தம் செய்தனர். எனவே ஃப்ளெட்கெலிங் இ-ஸ்போர்ட்சில் அணியில் ஊதியம் பெரும் இளம் வீரராக ஜோசப் டீன் இருக்கிறார்.

இப்போது ஜோசப் டீன் ஒரு ப்ரொபசனல் கேமர் மட்டுமின்றி, அதிகாரப்பூர்வமாக மிகவும் இளமையான வீரராகும் இருக்கிறார். இதுகுறித்து பிபிசியிடம் பேசிய ஜோசப், இந்த வாய்ப்பு எனக்கு கிடைத்த போது ஆச்சரியமாக உணர்ந்தேன். “நான் ஒரு ப்ரொபசனல் கேமராக வர வேண்டும் என நிறைய யோசித்தேன், ஆனால் 33 வீரர்களில் ஒருவராக என்னை தேர்வு செய்வதற்கு முன்னர் வரை யாரும் என்னை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என கூறினார்.

ஜோசப் டீன் குடும்பத்தினர் மற்றவர்கள் போல அல்லாமல் அவர் கேம் விளையாடுவதை ஊக்குவித்துள்ளனர், இதுகுறித்து பேசிய அவரது அம்மா, ஜிகி டீன், நான் எனது மகன் விளையாடும் விளையாட்டைப் பார்த்தேன், அதில் எந்த தவறும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவன் ஒரு நல்ல குடும்பத்திலிருந்து வந்தவன் என்பதால் பாதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.

Also read... Explainer: 'நாடாளுமன்ற நடவடிக்கைகளை' இந்திய அரசு எப்படி நேரடியாக ஒளிபரப்புகிறது தெரியுமா?

இந்த ஆன்லைன் விளையாட்டு ஒரு தீவிரமான கேம் என்றாலும், பெரும்பாலான ஃபோர்ட்நைட் வீரர்கள் மிகவும் இளம் இளைஞர்கள் என கூறப்படுகிறது. மேலும் அதிக வருமானம் ஈட்டும் முதல் 10 ஃபோர்ட்நைட் வீரர்களில் எட்டு பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்று esportsearnings.com வலைத்தளத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டில், 16 வயதான ‘புகா’ என்ற கைல் கியர்ஸ்டோர்ஃப் ஃபோர்ட்நைட் உலகக் கோப்பையை வென்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்த 16 வயது சிறுவன் பெற்ற பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா, 3 மில்லியன் டாலர்கள். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு சுமார் 22 கோடியே 66 லட்சம் ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டு 33 பேருக்கு இடையே போட்டிகள் நடைபெறும், அதில் வெற்றி பெற்றவர்களுக்கு உலக கோப்பையம், பரிசு தொகையும் வழங்கப்படும்.

உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Game