• HOME
  • »
  • NEWS
  • »
  • explainers
  • »
  • Brain Chip: நினைப்பது நிஜமாகும் - ஆய்வாளர்கள் சாதனை!

Brain Chip: நினைப்பது நிஜமாகும் - ஆய்வாளர்கள் சாதனை!

ஆய்வாளர்கள் சாதனை

ஆய்வாளர்கள் சாதனை

விஞ்ஞான வளர்ச்சியில் எதுவும் சாத்தியம் என்பதற்கு மகுடம் சூட்டும் விதமாக மேலும் ஒரு கண்டுபிடிப்பை அறிவியலாளர்கள் செய்து காட்டி சாத்தியப்படுத்தியுள்ளனர்.

  • Share this:
மூளையில் சிந்திக்கும் தகவல்கள் Brain சிப் மூலம் கம்ப்யூட்டரில் எழுத்து வடிவமாக தோன்றுவதை ஆய்வாளர்கள் சாத்தியப்படுத்தியுள்ளனர்.

கற்பனை என்று புறம் தள்ளப்பட்ட பல்வேறு விஷயங்கள் அறிவியல் தொழில்நுட்பத்தால் சாத்தியப்படுத்தப்பட்டுள்ளது. விஞ்ஞான வளர்ச்சியில் எதுவும் சாத்தியம் என்பதற்கு மகுடம் சூட்டும் விதமாக மேலும் ஒரு கண்டுபிடிப்பை அறிவியலாளர்கள் செய்து காட்டியுள்ளனர். மூளையில் சிப் பொருத்தி, நீங்கள் சிந்திப்பதை கம்ப்யூட்டர் மூலம் எழுத்து வடிவம் கொடுக்கும் அசாத்தியமான கண்டுபிடிப்பை அவர்கள் நிகழ்த்தியுள்ளனர். மனித சோதனையிலும், Brain Chip சோதனை 94 விழுக்காடு வெற்றிப்பெற்றுள்ளது.

வலிப்பு நோய்களால் பாதிக்கப்பட்டு முற்றிலும் முடமாக இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கு ஏதுவாக இந்த ஆய்வினை ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள் நினைக்கும் விஷயங்கள் அல்லது சொற்கள், அவர்களுக்கு பொருத்தப்பட்டிருக்கும் பிரையன் சிப் சென்சார் வழியாக கடத்தப்பட்டு கம்ப்யூட்டர் திரையில் அறிந்துகொள்ள முடியும். வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டு கழுத்துக்கு கீழாக முற்றிலும் செயலிழந்த ஒருவரை இந்த சோதனைக்கு பயன்படுத்தினர். 65 வயதான அவர் முதுகு தண்டுவட பாதிப்பால், உடல் செயலிழப்பால் பாதிக்கப்பட்டார்.

ALSO READ : "பீட்சா பார்ட்டியில் சேர்த்துக்கொள்ளவில்லை" என வழக்கு - ஊழியருக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிராங் வில்லட் தலைமையிலான குழுவினர், அமெரிக்கன் நியூரோசயின்டிஸ்ட் உதவியுடன் இந்த சோதனையில் ஈடுபட்டனர். அவர் எழுதுவதுபோல் நினைத்தபோது, இடது மூளையில் பொருத்தப்பட்ட சென்சார்கள், மூளையின் நடவடிக்கைகளை சமிக்கைகளாக கம்ப்யூட்டருக்கு அனுப்பியது.

இந்த சிக்னல்களை கம்ப்யூட்டரில் இருக்கும் இயந்திர கற்றல் அல்காரிதம் (machine-learning algorithm) அதற்கு உருவம் கொடுத்தது. கைகளில் எழுதுவதுபோல் அவர் சிந்தித்துக்கொண்டார். ஒரு நிமிடத்தில் 90 எழுத்துகளை பிரையன் சிப் சென்சார் தொழில்நுட்பம் கம்ப்யூட்டர் திரையில் காண்பித்தது.

ALSO READ : இந்தியாவின் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது - உலக சுகாதார நிறுவனம் வருத்தம்

சிந்தனை எழுத்து வடிவமானது 94 விழுக்காடு சரியாக இருப்பதாக தெரிவித்த ஆய்வாளர்கள், 60 வயதில் ஒருவர் செல்போன் திரையில் டைப் செய்வதற்கான வேகம் என்றும் கூறினர். வயதுக்கு ஏற்ப இந்த எழுத்து வடிவத்தின் வேகம் மாறுபடும் என்றும், கூடுதலான முயற்சிகள் மூலம் 100 விழுக்காடும் சரியாக இருக்கும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

இந்த வெற்றி என்பது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த ஆய்வாளர்கள், சிந்தனை சொற்களுக்கு, எழுத்துவடிவம் கொடுப்பது என்பது அறிவியல் மூலம் சாத்தியப்படுத்தியிருப்பது மிகப்பெரிய சாதனையாக கருதுவதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினர்.

ALSO READ : செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய சீன விண்கலம்

வலிப்பு நோயால் படுக்கையில் இருப்பவர்களுக்கும், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த முடியமல் தவிப்பவர்களுக்கும் இந்த கண்டுபிடிப்பு மிகப்பெரிய உதவியாக இருக்கும் என ஆய்வில் ஈடுபட்ட அறிவியலாளர் பிராங் வில்லட் தெரிவித்தார்.

பிரைன் சிப் தொடர்பான இந்த புதிய ஆய்வு மே 12 ஆம் தேதி Nature இதழில் வெளியாகியுள்ளது. எலான் மஸ்க் நிறுவனமும் பிரையன் சிப் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகிறது. நியூராலிங்க் என்ற அந்த ஆய்வினை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக மஸ்க் அறிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: