Home /News /explainers /

பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் - ஆம் ஆத்மி அரசின் திட்ட சாதக பாதகம் குறித்து விரிவான அலசல்

பஞ்சாப்பில் 300 யூனிட் இலவச மின்சாரம் - ஆம் ஆத்மி அரசின் திட்ட சாதக பாதகம் குறித்து விரிவான அலசல்

ஒட்டுமொத்தமாக 73.80 லட்சம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் காரணமாக மாநிலத்தின் மானியத்தொகை ரூ.14,337 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக 73.80 லட்சம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் காரணமாக மாநிலத்தின் மானியத்தொகை ரூ.14,337 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

ஒட்டுமொத்தமாக 73.80 லட்சம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் காரணமாக மாநிலத்தின் மானியத்தொகை ரூ.14,337 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

    Body: பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்து ஒரு மாத காலம் நிறைவடைந்த நிலையில், அம்மாநிலத்தில் அனைவருக்கும் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் மாநில அரசு அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக ஆம் ஆத்மி வழங்கிய முக்கிய வாக்குறுதிகளில் இது ஒன்றாகும்.

    ஆம் ஆத்மி அறிவித்துள்ள இந்த திட்டம் என்ன?

    ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கேஜ்ரிவால் கடந்தாண்டு ஜூன் மாதம் பஞ்சாப் மாநிலத்திற்கு இந்த திட்டத்தை ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்தால் அமல்படுத்தும் என வாக்குறுதி வழங்கினார். தேர்தலில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி கட்சி அமைந்தவுடன் 300 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
    டெல்லியில் ஏற்கனவே இதுபோன்ற இலவச மின்சார திட்டத்தை ஆம் ஆத்மி அரசு நடைமுறைபடுத்தியுள்ளது.

    இந்த திட்டத்தின் பயனாளர்கள் எத்தனை பேர்?

    பஞ்சாப் மாநிலத்தின் 73.80 லட்சம் குடும்பங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில அரசின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. மின்சார துறையின் புள்ளி விவரப்படி, மேற்கண்ட 73.80 லட்சம் குடும்பத்தில் 62.25 லட்சம் குடும்பத்தினர் மாதத்திற்கு 300 யூனிட் மின்சாரத்தை விட குறைவாகவே பயன்படுத்துகின்றனர். இது மொத்த இணைப்பில் 84 சதவீதம் ஆகும்.எனவே, இந்க புள்ளி விவரம் தொடர்தால் 84 குடும்பத்தினர் மாதம் மின் கட்டணம் செலுத்த தேவையில்லை என எதிர்பார்க்கலாம்.

    அதேவேளை, பருவ காலத்திற்கு ஏற்ப மக்களின் மின்சார பயன்பாடு மாறுபடும். குளிர் காலத்தில் மாதம் 300 யூனிட்  மின்சாரத்தை பயன்படுத்துபவர்கள் கொஞ்சம் குறைவகவும், கோடை காலத்தில் இந்த எண்ணிக்கை அதிகமாகவும் காணப்படும்.  எனவே, மக்களின் பயன்பாட்டிற்கு ஏற்ப இந்த சராசரி கணக்கிடப்பட்டுள்ளது. பில்லிங் சைக்கிளின் அடிப்படையில், 300 யூனிட் அளவுகோளாக வைத்தால் கோடை காலத்தில் அதிகபட்சமாக 69.21 லட்சம் குடும்பங்களும், குளிர் காலத்தில் குறைந்தபட்சமாக 51.23 லட்சம் குடும்பங்களும் 300 யூனிட்டை விட குறைவாக பயன்படுத்தியுள்ளன.

    இந்த இரு எண்ணிக்கையைக் கொண்டு 62.25 லட்சம் குடும்பங்கள் என்ற சராசரி உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட்டுக்கும் அதிகம் பயன்படுத்தும் குடும்பங்கள் அதிகபட்சமாக 22.57 லட்சமாகவும், குறைந்த பட்சமாக 4.49 லட்சாகவும் உள்ளன. இதிலிருந்து 11.55 லட்சம் என்ற சராசரியாக எடுக்கப்பட்டுள்ளது.

    வாடிக்கையாளர்களுக்கு தற்போது உள்ள மானியம் என்ன?

    தற்போதைய நிலையில், ஆண்டுக்கு ரூ.3,998 கோடி மானியம் வாடிக்கையாளர்களுக்கு மாநில அரசு செலவிடுகிறது.அதில், ரூ.1,657 கோடி தொகை வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 21.83 லட்சம் குடும்பத்திற்கு வழங்கப்படுகிறது. இவர்கள் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக பெற்றுவருகின்றனர்.

    அத்துடன், 7 கிலோவாட்டுக்கு குறைவாக லோட் கொண்ட ரூ.64.46 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2,341 கோடி மானியம் வழங்கப்படுகிறது. கடந்தாண்டு நவம்பர் மாதம் காங்கிரஸ் அரசு யூனிட்டுக்கு ரூ.3 மின் கட்டணத்தை குறைத்து உத்தரவிட்டது. இதை ஆம் ஆத்மி அரசு தற்போது தொடர்ந்துவருகிறது.

    தற்போது அறிவிக்கப்பட்ட புதிய திட்டத்தின் அடிப்படையில், மாநிலத்தில் சராசரியாக மாதம் 137 யூனிட் மின்சாரத்தை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் பட்சத்தில் பஞ்சாப் அரசு ரூ.5,500 கோடி தொகை மானியத்திற்கு செலவிட வேண்டும். புதிய திட்டத்தின் காரணமாக ரூ.1,502 கோடி தொகை கூடுதலாக மானிய சுமை கூடியுள்ளது.

    இந்த திட்டம் தொடர்பாக பஞ்சாப் மின்சார வாரியத்தின் அதிகாரிகள் பார்வை என்ன?

    அதிகாரிகளின் பார்வையின் படி, புதிய திட்டம் காரணமாக தற்போது சராசரியாக 150 யூனிட் இலவச மின்சாரத்தை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதை 300 யூனிட்டுகளாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    மேலும், கூட்டுக் குடும்பங்கள் தனி மீட்டர்கள் பயன்படுத்த தொடங்க வாய்ப்பு உள்ளது. அதேவேளை, 300 யூனிட்டுக்கு கொஞ்சம் அதிகமாக பயன்படுத்துபவர்கள் அதை குறைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது.  ஒட்டுமொத்தமாக 73.80 லட்சம் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டின் காரணமாக மாநிலத்தின் மானியத்தொகை ரூ.14,337 கோடியாக உயர வாய்ப்புள்ளது.

    இந்த திட்டத்தை வீடியோ மூலம் அறிவித்த மாநில முதலமைச்சர் பகவத் மான், புதிய திட்டத்தின் அடிப்படையில் இதுவரை 200 யூனிட் இலவச மின்சாரம் பெற்றவர்கள் இனி 300 யூனிட்கள் இலவச மின்சாரம் பெறுவார்கள். எனவே,இரு மாதத்திற்கு 645 யூனிட்களை அவர்கள் பயன்படுத்தினால், வெறும் 45 யூனிட்களுக்கு அவர்கள் கட்டணம் செலுத்தினால் போதும்.

    அதேவேளை, மற்ற பிரிவினர்கள் இரு மாதத்திற்கு 600 யூனிட்களுக்கு மேல் மின்சாரத்தை பயன்படுத்தினால், இரு மாத கணக்கின் அடிப்படையில் முழு கட்டணத்தை செலுத்த வேணடிய சூழல் ஏற்படும். எனவே, இந்த பிரிவு மக்கள் பொறுப்புடன் மின்சாரத்தை பயன்படுத்தி சலுகையை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றுள்ளார்.

    இதன் காரணமாக ஏற்படும் நிதி சுமையை மாநில அரசு எப்படி ஆம் ஆத்மி அரசு சமாளிக்கும் என்ற கேள்விக்கு பதிலளித்த செய்தி தொடர்பாளர் மல்விந்தர் சிங், "சுங்க கட்டணம், சுரங்க நடவடிக்கை ஆகியவற்றின் மூலம் அரசுக்கு வரும் மாதங்களில் வருவாய் அதிகரிக்கும். இன்ஸ்பெக்டர் ராஜ் அரசு அகன்றுள்ளதால் மாநில அரசின் வரி வசூல் சிறப்பாக இனி இருக்கும். மாநில அரசின் வருவாய் அதிகரிக்க தொடங்கினால், ஆம் ஆத்மி அரசு அளித்த வாக்குறுதிகள் ஒன்றொன்றாக செயல்படுத்தப்படும்" என்றார்.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Punjab

    அடுத்த செய்தி