ஹோம் /நியூஸ் /ஈரோடு /

4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் குடும்பம் நடத்திய பெண்... கூண்டோடு சிக்கிய கும்பல்

4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் குடும்பம் நடத்திய பெண்... கூண்டோடு சிக்கிய கும்பல்

4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் குடும்பம் நடத்திய பெண்

4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் குடும்பம் நடத்திய பெண்

கோபிச்செட்டி பாளையம் அருகே 4 ஆண்களை திருமணம் செய்து சுழற்சி முறையில் குடும்பம் நடத்திய பெண் கைது செய்யப்பட்டுள்ளார். 

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Erode, India

  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள DG புதூரை சேர்ந்தவர் சரவணன். நெசவு தொழில் செய்து வரும் இவருக்கு திருமணம் செய்து வைக்க வீட்டில் வரன் பார்த்து வந்தனர். இந்நிலையில் விருதுநகரைச் சேர்ந்த விஜயலட்சுமி திருமண புரோக்கர் இவர்களுக்கு அறிமுகமாகியுள்ளார். விருதுநகரில் சரிதா என்ற பெண் இருப்பதாகவும், அந்த பெண்ணை சரவணனுக்கு பேசி முடிக்க நேரில் அழைத்து வருவதாகவும் விஜயலக்ஷ்மி கூறியுள்ளார்.

  அதற்கு கமிஷனாக தனக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தர வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார் அதற்கு சரவணன் குடும்பத்தினர் ஒப்புக் கொள்ள கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி விருதுநகரிலிருந்து சரிதா உட்பட 8 பேருடன் கோபிச்செட்டிபாளையத்திற்கு விஜயலட்சுமி வந்துள்ளார். சரவணன் இல்லத்தில் இருவருக்கும் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. கமிஷன் தொகை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொண்டு விஜயலட்சுமி விருதுநகர் சென்று விட்டார்

  இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சரவணனுடன் குடும்பம் நடத்தி வந்த சரிதா, கடந்த வாரம் சரவணனின் செல்போனிலிருந்து வாட்ஸ் ஆப் மூலம் குரல் பதிவு ஒன்றை அனுப்பிவிட்டு அதனை அழிக்காமலேயே விட்டு விட்டார். அந்த பதிவில் சரிதா, "இங்கிருந்து வெளியே வரமுடியவில்லை, சரவணனிடம் பெரிய தொகை எதுவும் இல்லை என்றும் தனக்கு அடுத்ததாக வயதான ஒருவரை திருமணம் செய்ய ஏற்பாடு செய்யுமாறும்" கூறியுள்ளார்.

  Also Read : பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை... ஆசிரியர் பணியிடை நீக்கம்!

  இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், இது குறித்து தனது உறவினர் மற்றும் நணபர்களிடம் தெரிவித்துள்ளார். திருமண மோசடிக் கும்பலை மொத்தமாக பிடிக்க எண்ணிய உறவினர்கள், மற்றொருவருக்கு பெண் தேவைப்படுவதாகக் கூறி விஜயலட்சுமிக்கு போன் செய்துள்ளனர். அவரும் ஒரு லட்சம் ரூபாய் புரோக்கர் கமிஷனுக்கு ஆசைப்பட்டு, விஜயா என்ற பெண்ணுடன் கோபிச்செட்டிபாளையத்துக்கு வந்துள்ளார். அவரை மடக்கிப் பிடித்த உறவினர்கள், சரிதாவைப் பற்றி விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்துள்ளார்.

  இதையடுத்து, விஜயலட்சுமி, சரிதா, விஜயா ஆகிய மூவரையும் பங்களாபுதூர் காவல்நிலையத்தில் உறவினர்கள் ஒப்படைத்தனர். விசாரணையில் சரிதா ஏற்கெனவே 4 பேரை திருமணம் செய்து ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் எத்தனை பேரை இந்த கும்பல் ஏமாற்றியுள்ளது என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Crime News, Erode