முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு: பூதிக்காடு விவசாய நிலத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்

ஈரோடு: பூதிக்காடு விவசாய நிலத்தில் புகுந்து காட்டு யானை அட்டகாசம் - பொதுமக்கள் அச்சம்

காட்டு யானை

காட்டு யானை

Erode Elephant News : சத்தியமங்கலம் வனத்தில் இருந்து வெளியேறிய இந்த காட்டு யானை கடந்த 1 மாதமாக இப்பகுதியில் சுற்றி வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, யானை, மான், கரடி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமத்திற்குள் அடிக்கடி புகும் வனவிலங்குகள் சேதத்தை ஏற்படுத்துகின்றன.   இந்நிலையில் கடம்பூர் வன சரகத்திற்கு உட்பட்ட செங்காடு, பூதிக்காடு பகுதியில் ஒற்றை காட்டு யானை ஒன்று இன்று காலை நேரத்தில் உலா வந்தது.

விவசாய நிலத்திற்குள் புகுந்த காட்டுயானை அங்கு பயிரிடப்பட்டிருந்த கொள்ளு பயிரை தின்று ருசிப்பார்த்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானை நெருங்காமல் இருக்க நெருப்பு மூட்டி விட்டு கடம்பூர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். யானை பயிர்களை ருசிப்பதை அப்பகுதி இளைஞர்கள் தங்களது செல்போன்களில் படம் பிடித்தனர்.

இந்நிலையில் தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்த கடம்பூர் வனத்துறையை சேர்ந்த வேட்டை தடுப்பு காவலர்கள் பொதுமக்களோடு சேர்ந்து தகர டப்பாக்களை கொண்டு ஒலி எழுப்பி ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.   இந்த காட்டு யானை கடந்த 1 மாதமாக இப்பகுதியில் சுற்றி திரிந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

செய்தியாளர் : தினேஷ் ( ஈரோடு)

First published:

Tags: Elephant, Erode, Local News, Sathyamangalam, Tamil News