ஹோம் /நியூஸ் /ஈரோடு /

நேற்று இருவர், இன்று ஒருவர்.. ஸ்ரீஹரிகோட்டாவில் தொடரும் தற்கொலைகள்..!

நேற்று இருவர், இன்று ஒருவர்.. ஸ்ரீஹரிகோட்டாவில் தொடரும் தற்கொலைகள்..!

ஸ்ரீஹரிகோட்டா

ஸ்ரீஹரிகோட்டா

இஸ்ரோ வளாகத்தில் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டு பேர் மற்றும் ஒரு பெண் ஆகியோர் தற்கொலை செய்துகொண்டதற்கு காரணம் பணியிட மாற்றத்தில் சரியான நடைமுறைகளை கடைபிடிக்காததே என்று தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Andhra Pradesh, India

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ வளாகத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 947 பேர் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் 90 பேர் பெண்கள், அங்கு பணியில் இருக்கும் பாதுகாப்பு ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் வழங்கப்படும். ஆனால் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களை பணியிட மாற்றம் செய்யவில்லை. இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அவர்களில் 500 பேரை பணியிட மாற்றம் செய்தனர்.

அந்த இடத்திற்கு புதியவர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த நிலையில் மீதி உள்ள 447 பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கேயே பணியாற்றி வந்தனர். அவர்களில் தற்கொலை செய்து கொண்ட எஸ்ஐ விகாஸ், காவலர் சிந்தாமணி ஆகியோரும் உள்ளனர். நீண்ட காலமாக குடும்பத்தினரை பிரிந்து இருப்பது, அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் ஆகியவற்றின் காரணமாகவே அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் எஸ் ஐ விகாஸ் மரணம் அடைந்த காரணத்தால் ஏற்பட்ட மன வேதனையை தொடர்ந்து அவருடைய மனைவி பிரியங்கா இஸ்ரோ வளாகத்தில் உள்ள நர்மதா விருதுநகர் மாளிகையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இரண்டு நாளில் மூன்று பேர் தற்கொலை செய்து கொண்டது தற்போது இஸ்ரோவில் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

First published:

Tags: Sriharikota, Suicide