ஹோம் /நியூஸ் /ஈரோடு /

சேவல் சண்டை நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு : பெரிய வடமலைபாளையத்தில் பரபரப்பு

சேவல் சண்டை நடத்த காவல்துறை அனுமதி மறுப்பு : பெரிய வடமலைபாளையத்தில் பரபரப்பு

சேவல் சண்டை

சேவல் சண்டை

seval sandai | சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது காலில் கத்தி கட்டக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீதிமன்றம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றாததால் ஈரோடு பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த காவல்துறை அனுமதி மறுத்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பொங்கல் பண்டியைகையை முன்னிட்டு ஜனவரி 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை ஈரோடு மாவட்டம் பெரிய வடமலைபாளையத்தில் சேவல் சண்டை நடத்த அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டன. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள் பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி அளித்தனர்.

சேவல்களை துன்புறுத்தக்கூடாது; போட்டி நடைபெறும் ஒரு கால்நடை மருத்துவர் இருக்க வேண்டும்; சூதாட்டத்தில் ஈடுபடக்கூடாது; காலில் கத்தி கட்டக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்த நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படாததால் சேவல் சண்டனை நடத்த பவானி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

First published:

Tags: Chennai High court, Erode