ஹோம் /நியூஸ் /ஈரோடு /

அரசு பள்ளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. உள்ளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.. ஈரோட்டில் பரபரப்பு..!

அரசு பள்ளியில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்.. உள்ளே ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்.. ஈரோட்டில் பரபரப்பு..!

தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்

Sathyamangalam Emergency landing helicopter | மோசமான வானிலை காரணமாக அவசர அவசரமாக ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sathyamangalam | Erode

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட கடம்பூர் மலை பகுதியில் உகினியம் என்ற கிராமத்தில் அங்குள்ள அரசு உயர்நிலை பள்ளியின் வளாகத்தில் இன்று காலை சரியாக 10.30 மணியளவில் ஹெலிகாப்டர் ஒன்று  திடீரென அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. திடீரென ஹெலிகாப்டர்  தரை இறங்கியதால் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர்.

பெங்களூருவில் இருந்து திருப்பூர் நோக்கி ஹெலிகாப்டர் சென்ற போது மோசமான வானிலை நிலவியுள்ளது. மேலும், கடுமையான பனிமூட்டம் காரணமாக பாதை தெளிவாக தெரியாததால், அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

ஹெலிகாப்டரில் வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் உள்ளிட்ட 4 பேர் சென்றனர்.  1 மணி நேரமாக அங்கு  காத்திருந்த ரவிசங்கர் மற்றும் அவர் உதவியாளர்கள் வானிலை சீரான பிறகு உகினியம் கிராமத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றனர்.

First published:

Tags: Erode, Local News, Sathyamangalam