ஈரோட்டில் மதுபோதையில் அண்ணன் தம்பிகிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, அண்ணனை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்த தம்பி காவல்நிலையத்தில் சரணடைந்தார். பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு சூரம்பட்டியில் உள்ள உணவகம் ஒன்றில் திருப்பத்தூரை சேர்ந்த அருண்பாண்டியன் தங்கி பணியாற்றி வந்தார். இன்று அதிகாலையில் அருண்பாண்டியனுக்கும் அவரது தம்பி அஜீத்திற்கும் மதுபோதையில் தகராறு ஏற்பட்டுள்ளது.அப்போது, அத்திரமடைந்த தம்பி அஜீத் அண்ணனை மொசுவண்ண வீதியில் ஓட ஓட விரட்டிச்சென்று வெட்டி படுகொலை செய்தார். பின்னர் அஜீத் ஈரோடு காவல்நிலையத்தில் சரண் அடைந்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த அரசு மருத்துவமனை காவல்துறையினர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சரணடைந்த தம்பி அஜீத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அண்ணன் அருண்பாண்டியனை துரத்தி சென்று சரமாரிமாரியாக வெட்டும் காட்சிகள் அங்குள்ள சிசிடிவி-யில் பதிவாகியுள்ளது.
Must Read : வீட்டில் தனியாக இருந்த தாய்-மகள் அடித்துக் கொலை... நகைகள் கொள்ளை - கன்னியாகுமரியில் பரபரப்பு
மக்களை பதற வைத்து, உடன் பிறந்த அண்ணனையே வீதியில் விரட்டிச் சென்று வெட்டி படுகொலை செய்த அந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்- மா.பாபு (ஈரோடு)
உங்கள் நகரத்திலிருந்து(Erode)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.