ஹோம் /நியூஸ் /ஈரோடு /

சில்க் சுமிதா பிறந்தநாளை கொண்டாடிய டீ கடை உரிமையாளர்..

சில்க் சுமிதா பிறந்தநாளை கொண்டாடிய டீ கடை உரிமையாளர்..

பிறந்தநாளை கொண்டாடிய டீ கடை உரிமையாளர்

பிறந்தநாளை கொண்டாடிய டீ கடை உரிமையாளர்

ஒவ்வொரு ஆண்டும் சில்க் சுமிதாவின் புகைப்படம் அடங்கிய காலண்டர்களை குமார் விநியோகம் செய்வது வழக்கம்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோட்டில், நடிகை சில்க் சுமிதாவின் பிறந்த நாளை,  தேநீர் கடை ஒன்றின் உரிமையாளர்,  கேக் வெட்டியும், தூய்மை பணியாளர்களுக்கு இலவச வேட்டி சேலை   வழங்கியும் கொண்டாடினார்..

ஈரோடு அகில் மேடு வீதியில் தேநீர் கடை நடத்தி வருபவர் குமார். இவர்  சில்க் சுமிதா.வின் ரசிகராவார். ஒவ்வொரு ஆண்டும் சில்க் சுமிதாவின் பிறந்த தினத்தை நண்பர்களுடன் கொண்டாடி வருகிறார்.

இந்த ஆண்டு, தூய்மை பணியாளர்களுடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடிய அவர், அனைவருக்கும் லட்டு மற்றும் இனிப்புகளை வழங்கினார். மேலும், 50 தூய்மை பணியாளர்களுக்கு இலவசமாக புத்தாடைகளை வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் சில்க் சுமிதா.வின் புகைப்படம் அடங்கிய காலண்டர்களை குமார் விநியோகம் செய்வது வழக்கம். இதை போல்  அடுத்த ஆண்டிற்கான நாள்காட்டியை சில்க் சுமிதாவின் நினைவாக தேநீர் கடை வாடிக்கையாளர்களுக்கு வழங்கினார்.

செய்தியாளர் : பாபு (ஈரோடு)

First published:

Tags: Birthday, Erode, Local News, Silk Smitha