ஹோம் /நியூஸ் /ஈரோடு /

விவசாயியின் நாக்கை கடித்த விஷ பாம்பு.. நாக சாந்தி பூஜையில் நேர்ந்த விபரீதம்..!

விவசாயியின் நாக்கை கடித்த விஷ பாம்பு.. நாக சாந்தி பூஜையில் நேர்ந்த விபரீதம்..!

மாதிரி படம்

மாதிரி படம்

பாம்பு கடித்ததை அறிந்த சாமியார் உடனடியாக கத்தியை எடுத்து விவசாயியின் நாக்கை துண்டித்தார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Erode | Erode

திருப்பூரில் நாக சாந்தி பூஜை செய்ய வந்த விவசாயியின் நாக்கை கண்ணாடி விரியன் பாம்பு கடித்ததால், செய்வதறியாது திகைத்த சாமியார் விவசாயியின் நாக்கை துண்டித்தார்.

திருப்பூரில் முத்தூர் பகுதியை சேர்ந்த 54 வயது விவசாயி, அரசு அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.

இவருக்கு தினசரி இரவில் பாம்பு கடிப்பது போன்று கனவு வந்து கொண்டே இருந்தது. இதனை மனைவியிடம் சொல்லவே அவரும் கணவரை அழைத்து கொண்டு ஒரு ஜோதிடரிடம் சென்றுள்ளார்.

அங்கு ஜோதிடர் ஈரோட்டில் உள்ள ஒரு சாமியாரிடம் செல்லுங்கள் என்றும், அவரிடம் நிறைய பாம்புகள் உள்ளது. அங்கு சென்று நாக சாந்தி பூஜை செய்தால் பாவங்கள் விலகும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

ஜோதிடரின் பேச்சை கேட்ட தம்பதியினர், சொன்னமாதிரியே ஈரோட்டிற்கு சென்று சாமியாரை சந்தித்துள்ளனர். அங்கு தனக்கு வந்த கனவு குறித்து விவசாயி சாமியாரிடம் எடுத்து கூறியுள்ளார்.

இதனை கேட்ட சாமியார் தன்னிடம் இருந்த கண்ணாடி விரியன் பாம்பை வைத்து நாகசாந்தி பூஜை செய்ய ஏற்பாடு செய்தார்.

நாகசாந்தி பூஜையின் போது, விவசாயியை நாக்கை நீட்டி பாம்பிடம் ஆசிர்வாதம் வாங்குமாறு சாமியார் கூறியுள்ளார். இதனை கேட்ட விவசாயி, ஆசிர்வாதம் வாங்குவதற்காக பாம்பின் முன் நாக்கை நீட்டியுள்ளார்.

நீண்ட நேரம் பூஜையில் கடுப்பாகி இருந்த பாம்பு, நாக்கை நீட்டியவுடன் கடுப்பில் அவரை கொத்தியுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சாமியோரோ விஷம் பரவாமல் தடுக்க வேண்டும் என எண்ணி, விவசாயியின் நாக்கை கத்தியால் அறுத்துள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் மிதந்த விவசாயி, சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். உடனடியாக விவசாயி மீட்கப்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தீவிர சிகிச்சைக்கு பின் விவசாயியை காப்பாற்றிய மருத்துவர், பாம்பு கடித்தால் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டும், காப்பாற்றுவதாக எண்ணி நாக்கை அறுக்க கூடாது என வலியுறுத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர்: பாபு, ஈரோடு

First published:

Tags: Crime News, Erode, Local News, Snake