முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு எப்போது? - செங்கோட்டையன் விளக்கம்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு எப்போது? - செங்கோட்டையன் விளக்கம்!

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

Sengottaiyan Press Meet | சரியான நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடைத்தேர்தல் முடிவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என செங்கோட்டையன் பேச்சு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

அதிமுக வேட்பாளர் அறிவிப்பதில் எவ்வித குழப்பமில்லை என்றும் நாளை தேர்தல் பணிமனை திறக்கும்போது நல்ல பதில் கிடைக்கும் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழுவுடன் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்திற்கு அனுமதி பெறவில்லை எனக்கூறி கூட்டம் நடத்தக்கூடாது என தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்த நிலையில் அதனையும் மீறி முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் அதிமுக ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், மக்கள் மாற்றத்தை விரும்புவதாக தங்களிடம் தெரிவிப்பதாகவும், மக்களின் மனநிலை மாறியுள்ளதால் கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றார். மாற்றங்கள் உருவாகின்ற காலம் வெகு தொலைவில்லை என்ற செங்கோட்டையன், இடம்பெயர்ந்த 30 ஆயிரம்  வாக்காளர்களின் விவரங்களை சரிபார்த்து, சேகரித்து வருவதாகவும் தெரிவித்தார்.

வேட்பாளர் அறிவிப்பதில் எவ்வித குழப்பமில்லை என்றும் நாளை தேர்தல் பணிமனை திறக்கும்போது நல்ல பதில் கிடைக்கும் என்றார். கிழக்கு தொகுதியில் வாக்காளர்  பட்டியலில் இறந்த  வாக்காளர்களே 5 ஆயிரம் பேர் இருப்பதாகவும் , எதிரணியினர் ஆயிரம் ரூபாய் அல்ல எவ்வளவு கொடுத்தாலும் அதிமுக வெற்றி என பேசினார்.

சரியான நேரத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடைத்தேர்தல் முடிவு 2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும் என பேசிய செங்கோட்டையன், தாலிக்கு தங்கம் திட்டம் எங்கே? ரூ.786 கோடி தாலிக்கு தங்க திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் ரூ.200 கோடி மட்டுமே பெண்கள் திட்டத்திற்காக செலவு செய்யப்படுவதாக குற்றச்சாட்டினார். சரியான நேரத்தில், சரியான முறையில் அதிமுக பொதுக்குழு விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளோம் என செங்கோட்டையன் தெரிவித்தார்.

செய்தியாளர்: மா.பாபு

First published:

Tags: ADMK, Erode, Local News