பிரபாகரன் உயிரோடு உள்ளார் என பழ.நெடுமாறன் பேசியுள்ள நிலையில், தன் மகன் பாலசந்திரனை பலிகொடுத்துவிட்டு பிரபாகரன் வெளிநாடு தப்பி சென்றிருப்பாரா? எனவும் போர் முடிந்து 15 ஆண்டுகள் பதுங்கியிருப்பாரா? எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
தஞ்சாவூர் அருகே விளாரில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் நலமுடன் உள்ளதாகக் கூறினார். பிரபாகரன் நலமுடன் இருப்பது ஈழத் தமிழர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார். பிரபாகரன் அனுமதியுடன்தான் இந்த தகவலை வெளியிடுவதாகக் கூறிய பழ.நெடுமாறன், பிரபாகரனின் மனைவியும், மகளும் உரிய நேரத்தில் மக்கள் முன்பு தோன்றுவார்கள் என்று உறுதிபடத் தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது “சின்னவன் பாலசந்திரனை பலி கொடுத்துவிட்டு பிரபாகரன் உயிரோடு தப்பியிருப்பார் என சொல்வது சரியல்ல. எந்த சூழலில் நாட்டைவிட்டு செல்ல மாட்டேன் என சொன்ன அவர், தப்பி சென்றிருப்பாரா? போர் முடிந்து பதினைந்து ஆண்டுகள் பதுங்கியிருப்பார் என நினைக்கிறீர்களா? சொல்லிவிட்டு வருபவர் அல்ல பிரபாகரன். அவர் வந்துவிட்டுதான் சொல்வார்” என கூறினார்.
மேலும், “பெரியாரிடம் கடவுள் இல்லை என சொல்கிறீர்களே கடவுள் நேரில் வந்தால் என்ன செய்வீர்கள் என கேட்டனர். அதற்கு கடவுள் இருக்கு என சொல்வேன் என சொன்னார். அதுபோல பிரபாகரன் நேரில் வந்தால் பார்க்கலாம்” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: LTTE, Pazha Nedumaran, Prabhakaran, Seeman