முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : துணை ராணுவப் படையினர் வருகை..

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் : துணை ராணுவப் படையினர் வருகை..

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு துணை ராணுவப் படையினர் வருகை

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு துணை ராணுவப் படையினர் வருகை

ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக ஈரோட்டிற்கு துணை ராணுவப் படையினர் வந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு வரும் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிட காங்கிரஸ், அதிமுக, சுயேச்சை வேட்பாளர்கள் என 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இவற்றில் பரிசீலனைக்குப் பிறகு 83 பேரின் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.

நேற்றுடன் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், அமமுக வேட்பாளர் உட்பட 6 பேர் வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற்றனர். இதையடுத்து, 77 பேர் களத்தில் உள்ளனர். தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ‘கை’ சின்னமும், அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு இரட்டை இலை என சின்னங்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்குத் தொகுதி வேட்பாளர்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். அப்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள், பரப்புரைக்கான கட்டுப்பாடுகள் குறித்து வேட்பாளர்களுக்கு அறிவுரை வழங்கப்படவுள்ளது.

இதன் தொடர்ச்சியாக தேர்தல் நடவடிக்கையின் முன்னெச்சரிக்கையாக இந்தோ- திபெத்தியன் பாதுகாப்புப் படை, ரயில்வே பாதுகாப்புப் படை என இரண்டு கம்பெனி துணை ராணுவப் படையினர் இன்று ஈரோடு வந்தடைந்தனர். இவர்கள் பதற்றம் அதிகம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர்.

First published:

Tags: Border Security Force, Erode Bypoll, Erode East Constituency