Home /News /erode /

அரசு பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் - சிறப்பு பேருந்து இயக்க நம்பியூர் மக்கள் கோரிக்கை

அரசு பேருந்தில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம் - சிறப்பு பேருந்து இயக்க நம்பியூர் மக்கள் கோரிக்கை

 அரசு பேருந்தில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்த பள்ளி மாணவர்கள்...

அரசு பேருந்தில் தொங்கியபடி ஆபத்தாக பயணம் செய்த பள்ளி மாணவர்கள்...

Nambiyur | நம்பியூர் அருகே  அரசு பேருந்தின் பின்புறத்தில் ஏணியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் மிகவும் ஆபத்தாக பயணம் செய்து வருகின்றனர். இந்த கொடுமை தினமும் நடந்து வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Nambiyur, India
    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள வேமாண்டம்பாளையம் மற்றும் பட்டிமணியக்காரன் பாளையம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் காலை, மாலை இருவேளைகளிலும் வீட்டிற்கு செல்வதற்காக அந்த வழியில் வரும் அரசு பேருந்தில் செல்வது வழக்கம்.

    இந்நிலையில் வழக்கம் போல  பள்ளி மாணவர்கள் அரசு பேருந்தில் ஏறிய போது அந்த பேருந்து முழுவதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அப்போது  பள்ளி மாணவர்கள் பேருந்தின் உள்ளே  இடமில்லாத காரணத்தால்  நடத்துனருக்கு தெரியாமல் பேருத்தின்  பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளனர்.

    இவ்வாறு ஆபத்தாக மாணவர்கள் பயணம் செய்வதை  பேருந்தின் பின்னால் இரு  சக்கர வாகனத்தில் சென்ற வாகன ஓட்டி ஒருவர்   ஓட்டுநரிடம்  பின்புற ஏணியிலும் மாணவர்கள் தொங்கிக்கொண்டு பயணம் செய்து வருவதாக கூறி எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால்  அரசு பேருந்தை ஓட்டிச்சென்ற  நடத்துனரும்  ஓட்டுனரும் மாணவர்களை இறக்கி விட எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து பேருந்தை இயக்கியுள்ளனர்.

    Also see... ஜெயலலிதா இறப்புக்கு என்ன காரணம் - AIIMS மருத்துவ குழு அறிக்கையில் முக்கிய தகவல்கள்

    பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணத்தை தவிர்க்க   நம்பியூரிலிருந்து சிறப்பு பேருந்து ஒன்றை  இயக்க வேண்டுமென பெற்றோர்கள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆபத்தை உணராமல்  மாணவர்கள் பயணம் செய்வதை வீடியோ எடுத்துள்ள வாகன ஓட்டி ஒருவர் அதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    செய்தியாளர்: தினேஷ், ஈரோடு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Bus, Erode, Students

    அடுத்த செய்தி