முகப்பு /செய்தி /ஈரோடு / தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சை.. ஈரோட்டில் பட்டியல் இன நகர்மன்ற தலைவரை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு..

தேசிய கொடி ஏற்றுவதில் சர்ச்சை.. ஈரோட்டில் பட்டியல் இன நகர்மன்ற தலைவரை அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு..

மாதிரி படம்

மாதிரி படம்

Erode News : ஈரோடு மாவட்டம் புளியம்பட்டியில், பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நகர்மன்ற தலைவரை கொடியேற்ற அனுமதிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி நகர்மன்ற தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், புளியம்பட்டியில் இவரிடம் எந்த ஆலோசனையும் செய்யாமல் இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்படி நகராட்சி ஆணையர் சையது உசேன் தலைமையில் குடியரசு தின நிகழ்வுகள் நடைபெறுமென நகர்மன்ற தலைவருக்கு அழைப்பிதழும் தரப்பட்டுள்ளது. இதனால் ஜனார்த்தனன் குடியரசு தின நிகழ்விற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது.

இந்நிலையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையர் சையது உசேன் தேசியக்கொடி ஏற்றினார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து திமுக நகர்மன்ற உறுப்பினர்கள் கொடியேற்றும் நிகழ்வில் பங்கேற்கவில்லை. குடியரசு தினத்தன்று பட்டியலின பஞ்சாயத்து தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டுமென தலைமைச் செயலாளர் இறையன்பு மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியும்கூட இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரோட்டில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நகரமன்றத் தலைவர் கொடியேற்றுவதில் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, தேசிய கொடியேற்றும் நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் வராத காரணத்தால் தான், தானே கொடியேற்றியதாக நகராட்சி ஆணையர் கூறியதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

புளியம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற சம்பவம் குறித்து பேசிய நகர்மன்றத் தலைவர் ஜனார்த்தனன், கொடியேற்றுவது தொடர்பாக தன்னிடம் எதுவும் கலந்தாலோசிக்கவில்லை என தெரிவித்தார். நடந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன் உன்னி, கொடியேற்றும்போது நகர்மன்ற தலைவர் வராத காரணத்தால், தானே கொடியேற்றியதாக நகராட்சி ஆணையர் கூறியதாகவும் தெளிவுப்படுத்தினார். இந்த நிகழ்வு சமூக வலைதளங்களில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

First published:

Tags: Erode, Local News, Tamil News