ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் முதலைகள் நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் பத்து வன சரகங்கள் உள்ளன. இதில் பவானிசாகர் வனச்சரகத்திற்கு உட்பட்ட தெங்குமரஹாடா பகுதியில் பவானிசாகர் அணை நீர் பிடிப்பு பகுதியான மாயாற்றை கடந்து தான் கள்ளம்பாளையம் தெங்குமரஹாடா உள்ளிட்ட கிராமங்களுக்கு பரிசலில் செல்ல முடியும்.
இந்நிலையில் நேற்று கள்ளம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் ஆற்றைக் கடக்கும் போது அங்கு பெரிய முதலை ஒன்று படுத்து இருப்பதை கண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து தங்களது செல்போனில் படம் பிடிக்க ஆரம்பித்தனர். அதில் முதலை சிறிது நேரம் கழித்து மாயாற்றில் இறங்கி சென்றது. இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாய் பரவி அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தெங்குமரகாடா மற்றும் கள்ளம்பாளையம் பகுதி பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும், ஆற்றில் நீண்ட நேரம் குளிக்க வேண்டாம் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர்: தினேஷ், ஈரோடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Local News, Sathyamangalam, Tamil News