ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா கடந்த சில நாட்களுக்கு முன் மாரடைப்பால் மரணமடைந்தார். திருமகன் ஈவெரா காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவின் மகன் ஆவார். திருமகன் ஈவெரா மரணம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருமகன் ஈவெரா மறைவிற்கு நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் அவரது மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியாகிவிட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். இந்நிலையில் மேகலாயா, திரிபுரா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதனுடன் ஈரோடு கிழக்கு தொகுதி உட்பட மற்ற மாநிலங்களில் காலியாக உள்ள தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஜனவரி 31 வேட்புமனு தாக்கல் தொடங்கும் என்றும் மார்ச் 02 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு தேர்தல் ஆணையர் சத்யபிரத சாகு கூறுகையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்படவுள்ளது. புதிய திட்டங்களை செயல்படுத்த கூடாது. தேர்தல் பார்வையாளர் ஆலோசனைக்கூட்டம் டெல்லியில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் ஈரோடு தேர்தல் பார்வையாளர் நியமிப்பது குறித்து முடிவு செய்யப்படும். பறக்கும் படையினர், துணை ராணுவத்தினர் ஆகியோர் நியமிப்பது தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்யப்படும்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்கு சாவடிகள் உள்ளது. இந்த சட்டமன்ற தொகுதியில் 2,26,876 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண்கள் - 1,10,713, பெண்கள் - 1,16,140, மூன்றாம் பாலினத்தவர் - 23 பேர் ஆவார். 500 மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஈரோடு நகராட்சி ஆணையர் சிவக்குமார் தான் தேர்தல் நடத்தும் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். கொரோனா பாதிப்பு இருக்கும் தொகுதியாக இருந்தால் ஒன்றிய அரசின் வழிகாட்டுதல் நடைமுறைகள் கடைபிடிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரோடு கிழக்கு தொகுதியில் தலைவர்களின் பெயர்கள், புகைப்படம் ஆகியவற்றை மறைக்கும் பணி தொடங்கியது. மேலும் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் அகற்றம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் முறையான ஆவணங்கள் இல்லாமல் அதிகளவில் பணம் எடுத்து செல்ல வேண்டாம் என்றும் அறிவுறத்தப்பட்டுள்ளனர்.

First published:

Tags: Erode, Erode Bypoll, Erode East Constituency