ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோட்டில் ரூ.33 கோடி மதிப்புள்ள பெருமாள் சிலை மீட்பு... தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் அதிரடி...

ஈரோட்டில் ரூ.33 கோடி மதிப்புள்ள பெருமாள் சிலை மீட்பு... தனிப்படை போலீசார் மாறுவேடத்தில் அதிரடி...

மீட்கப்பட்ட பெருமாள் சிலை

மீட்கப்பட்ட பெருமாள் சிலை

Erode News | தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமி ரூ.33 கோடிக்கு விலை நிர்ணயித்த நிலையில் மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள் ரூ.15 கோடிக்கு விலையை இறுதி செய்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Erode, India

  ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நாகர்காலபாளையம் பகுதியில் வசித்து வரும் பழனிச்சாமி என்பவரது வீட்டில் 600 ஆண்டுகள் தொன்மையான பெருமாள் சிலை பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

  அதனடிப்படையில் உதவி ஆய்வாளர்கள் ராஜேஷ், பாண்டியராஜன் சிறப்பு உதவி ஆய்வாளர் நாகேந்திரன் தலைமை காவலர்கள் பரமசிவம், சிவபாலன், மகாராஜன் மற்றும் காவலர் ராஜேஷ் ஆகியோர் அடங்கிய தனிப்படை  குழு பழனிசாமி வசிக்கும் பகுதியில் நடத்திய சோதனையில்  அவரிடம் சிலை இருப்பது உறுதி செய்யப்பட்டது.

  இதையடுத்து, தனிப்படையினர் சிலையை வாங்குவது போல மாறுவேடத்தில் சென்று பழனிச்சாமி ரூ.33 கோடிக்கு விலை நிர்ணயித்த நிலையில் மாறுவேடத்தில் சென்ற அதிகாரிகள் ரூ.15 கோடிக்கு விலையை இறுதி செய்துள்ளனர்.

  இதையும் படிங்க : மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

  அதன்படி கடந்த 7ம் தேதி மாலை 4 மணியளவில் சிலையை வாங்குவதற்காக மாறுவேடத்தில்சென்ற தனிப்படையினர் பழனிச்சாமிடம் சிலையை கேட்டபோது அவர் மறைத்து வைத்திருந்த 22.8 கிலோ எடையுள்ள, 58 செமீ உயரமும், 31 செமீ அகலமும் உள்ள சிலையை எடுத்து காண்பித்துள்ளார்.

  இதையடுத்து, சிலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் அது யாருக்கு சொந்தமானது என்பது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். இதுகுறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய திருச்சி சரக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி பாலமுருகன் கூறுகையில், “பழனிச்சாமி இந்த சிலையை விற்க முயன்றதும் தெரியவந்தது. அதேபோல் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் உள்ள ஒரு கோயிலில் இருந்து அந்த கோயிலை சேர்ந்த அர்ச்சகர் மூலம் இந்த சிலை விற்பனை செய்வதற்கு சென்றதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

  இதையும் படிங்க : தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்.. விழுப்புரத்தில் அரங்கேறிய கொடூரம்

  அதன் அடிப்படையில் முதல் கட்டமாக இந்த சிலையின் உண்மைத்தன்மை குறித்து கண்டறிய கர்நாடக மாநிலத்திற்கு அனுப்பி வைத்து அந்த கோயிலுக்கு சொந்தமானது தானா என்பது குறித்து விசாரணை நடத்திய பிறகுதான் பழனிச்சாமி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய ஆவணங்கள் இல்லாமல் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் கைது செய்யப்படுவார்” என்று தெரிவித்தார்.

  செய்தியாளர் : கோவிந்தராஜ் - திருச்சி

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Erode