Home /News /erode /

ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு - தனியார் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஈரோடு சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்க எதிர்ப்பு - தனியார் மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம்

Erode | ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்றப் பிறப்பித்த உத்தரவைச் சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளனர்.

    16 வயது சிறுமியிடம் கருமுட்டை பெற்ற விவகாரத்தில் ஈரோட்டில் சுதா மருத்துவமனைக்கு தமிழக அரசு சீல் வைத்தனர். இதனை எதிர்த்த சுதா மருத்துவமனை நீதிமன்றத்தில் சென்று தடை உத்தரவுப் பெற்று மருத்துவமனையை மீண்டும் திறந்து வந்த நிலையில் நேற்று நீதிமன்றம் மீண்டும் தலையிட்டு சீல் வைக்க உத்தரவிட்டது.

    இதனை அடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று மருத்துவமனைக்கு சீல் வைக்க சென்றனர். அவசரகதியில் சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் ஈரோடு கிளை சார்பாக மருத்துவர்கள் மருத்துவமனைகளை மூடி  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் மாவட்டம் முழுவதும் 250 மருத்துவமனைகளில் 800 மருத்துவர்கள் வெளிநோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிக்காமல் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவு மட்டும் வழக்கம் போல் இயங்கும் என்றும் அறிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Also see... மெரினா-கோவளம் கடற்கரை மறுசீரமைப்பு... மீனவர்கள் எதிர்ப்பு...

    இதனால். மருத்துவப்பணிகள் ஈரோட்டில் பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் தற்போது பல்வேறு மருத்துவமனைகள் அவசரகதியில் சீல் வைக்கப்படுவதால் தமிழக அரசு  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு பிரிவு விரைவில் கூடி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராஜா தெரிவித்தார்.

    செய்தியாளர்: மா.பாபு, ஈரோடு     
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Doctors Strike, Erode, Hospital

    அடுத்த செய்தி