முகப்பு /செய்தி /ஈரோடு / “ஓபிஎஸ் விரைவில் கவர்னர் ஆவார், இபிஎஸ் பாஜக தலைவர் ஆவார்”- தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

“ஓபிஎஸ் விரைவில் கவர்னர் ஆவார், இபிஎஸ் பாஜக தலைவர் ஆவார்”- தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி பேச்சு

உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அடுத்த 5 அல்லது 6 மாதத்தில் பெண்களுக்கான உரிமை தொகை அறிவிக்கப்படும் - உதயநிதி

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

பா.ஜ.க என்பது ஆடியோ, வீடியோவை வைத்து மிரட்டுகின்ற கட்சி எனவும் அது கவர்னர் டிரெயினிங் சென்டர் எனவும் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதி SKC சாலையில் திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஈரோடு மாவட்டத்திற்கு முதல்முறையாக அமைச்சராக பொறுப்பேற்ற பின் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள வந்து இருக்கிறேன். மகன் விட்டு சென்ற பணியை தந்தை ஆற்ற வாய்ப்பு கொடுங்கள். ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தால்  மாதம்தோறும் ஈரோடு வருவேன். ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு போகின்ற இடங்களில் வரவேற்பு இருக்கிறது. தாய்மார்கள் முடிவெடுத்தால் யாராலும் தடுக்க முடியாது. அதிமுக வேட்பாளர் செல்லும் இடங்களில் எதிர்ப்பு இருக்கின்றது. இதை  தொலைக்காட்சிகளில் பார்க்க முடிகிறது.

எடப்பாடி பழனிசாமி மீசை வைத்த ஆம்பிளை என்கிறார். 2017ல் சிபிஐ சோதனை தலைமை செயலகத்தில் நடந்தபோது அந்த மீசை என்ன செய்தது?, தூத்துக்குடி தூப்பக்கி சூடு, கொடநாடு கொலை, தமிழ்நாட்டு உரிமைகள் பறிக்கபட்டபோது அந்த மீசை என்ன செய்தது? அவர் லெவலுக்கு பேசினால் தாங்க மாட்டார்.

அவர், கடந்த ஆட்சியில் 5 லட்சம் கோடி கடன் வைத்திருந்தனர், இருந்தாலும் திமுக ஆட்சிக்கு வந்த பின் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி வருகிறோம். அடுத்த 5 அல்லது 6 மாதத்தில் பெண்களுக்கான உரிமை தொகை அறிவிக்கப்படும். எடப்பாடியும் பன்னீர்செல்வமும் கவர்னர், மோடியை சந்திப்பது அவர்கள் சொந்த பிரச்னைக்காகதான்.

பா.ஜ.க என்பது ஆடியோ, வீடியோவை வைத்து மிரட்டுகின்ற கட்சி, பா.ஜ.க என்பது கவர்னர் டிரெயினிங் சென்டர். ஓ.பன்னீர்செல்வம் கவர்னராக விரைவில் அறிவிக்கப்படலாம், அவருக்கு வாழ்த்துகள்.  எடப்பாடி பழனிசாமி பாஜக தலைவராகிவிடுவார்" என கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “உலக பணக்காரர்கள் மத்தியில் இரண்டாவது இடம் அதானிக்கு இருந்தது. இதுவரை 6 ஏர்போர்ட் அவருக்கு கொடுத்துள்ளனர். ரயில்வேயும் ஆதானி நடத்துகிறார். மோடி ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே நண்பர் என இருக்கின்றார். குஜராத்தில் மதகலவரம் நடந்த போது ஆயிரம் பேர் காணமல் போனார்கள் என ஆவணபடம் செல்கிறது. அதுக்காக பிபிசி அலுவலகத்தில் மத்திய அரசு ரெய்டு நடத்தினர். இந்த கேவலமான ஆட்சிக்கு முற்றுபுள்ளி வைக்கனும்.

கிங்ஸ் மருத்துவமனை விரைவில் தொடங்கப்பட இருக்கிறது. 120 கோடி பட்ஜெட்டில் கலைஞர் பெயரில் நூலகம் செயல்பாட்டிற்கு விரைவில் வரும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை 80 சதவீதம் வேலை முடிந்துவிட்டது என்கின்றனர். ஆனால் சுற்றுசுவர் மட்டும்தான் உள்ளது” என தெரிவித்தார்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, Udhayanidhi Stalin