ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வேட்பாளர் போட்டியிட உள்ள நிலையில் சூரம்பட்டி பகுதியில் தேர்தல் பணிமனை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார். பின்னர் நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்ட மகளிர் பாசறை துணை செயலாளராக இருக்கும் மேனகாவை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம் இவற்றிற்கு யார் காரணம். வாக்குக்கு கையேந்தும் நிலைமையில்தான் மக்களை வைத்துள்ளார்கள். தலைவனை மக்கள் தேட வேண்டும். வழியில்லை என்று சொல்லக்கூடாது. வழியை உருவாக்க வேண்டும்.
ஆளும் கட்சி ஜெயிக்கும் என்பது பிம்பம். மக்கள் மாற்றத்தை விரும்பினால் எந்த கட்சியாக இருந்தாலும் புரட்டிப் போடுவார்கள். சந்துக்கு சந்து கணக்கெடுத்து காசு கொடுக்கிறார்கள்.
ஆவணப் படம் என்ன கற்பனையா. கேரளாவில் அரசு வெளியிடுகிறது. ஆனால் இங்கு அலைபேசியில் பார்ப்பவர்களை கூட கைது செய்கிறார்கள். இது முதலாளிகளுக்காக கட்டமைக்கப்பட்ட அதிகாரம். எல்.ஐ.சியின் 30% பங்கு விற்பனையாகி விட்டது. பொது நிறுவனங்கள் அனைத்தும் தனியார்மயமாகிறது. அதானி போன்ற முதலாளியை சார்கிறது.
கடந்த முறை 34 சதவீதம் மக்கள் வாக்கு செலுத்தவில்லை. மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்றால் வாக்கு செலுத்த வேண்டும். இந்த முறை இங்கு 12 நாட்களுக்கு மேல் இருந்து இங்கு தேர்தல் பணி செய்வேன். சொத்து வரியால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது, வாடகையும் ஏற்றப்படுகிறது. அரிசி பருப்பில் கூட ஜிஎஸ்டி போடப்படுகிறது. இனி வீடு கட்ட முடியாது. வரிதான் கட்ட முடியும்” என தெரிவித்தார்.
மேலும், “வட மாநிலத்தவர்கள் தாக்கியது எனக்கு வியப்பில்லை. இவர்களால் அதை தடுக்க முடியாது என்னால்தான் தடுக்க முடியும். தமிழர் தொகுதியான பெருந்துறை இப்போது மார்வாடி தொகுதி ஆகிவிட்டது.
வட மாநிலத்தவர் தமிழ்நாட்டு அரசியலை தீர்மானிக்கிறார்கள்.
அவர்கள் வாக்கு பாஜகவின் வாக்கு. அவர்களிடம் யாருக்கு வாக்கு என்றால் மோடிஜி என்பார்கள். பெருந்துறை சந்தையில் ஒரு முகம் கூட தமிழர் முகம் இல்லை. சென்னையில் பிச்சை எடுப்பவர்களும் வட மாநிலத்தவர்தான். நமக்கு பிச்சை எடுக்கும் வேலைகூட கிடைக்காது போல” என கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode Bypoll, Erode East Constituency, Naam Tamilar katchi