ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஒவ்வொரு முறையும் ரூ.1500 கொடுத்தும் ஆதார் கிடைக்கல... வளர்ப்பு மகன்களுடன் தாய் கலெக்டரிடம் மனு..

ஒவ்வொரு முறையும் ரூ.1500 கொடுத்தும் ஆதார் கிடைக்கல... வளர்ப்பு மகன்களுடன் தாய் கலெக்டரிடம் மனு..

ஆதார் கார்டு கேட்டு போராட்டம்

ஆதார் கார்டு கேட்டு போராட்டம்

Erode News | தொழில் நுட்ப கோளாறால் ஆதார் பதிவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆதார் மையத்தில் தெரிவித்துள்ளனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Erode, India

  ஈரோட்டில் ஓராண்டாக போராடியும் ஆதார் பெற முடியாத நிலையில், பள்ளியில் கட்டாயப்படுத்துவதாக கூறி இரண்டு மாணவர்களுடன் வளர்ப்புத்தாய் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

  ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்த தம்பி - வள்ளி தம்பதியினரின் இரண்டு மகன்கள் வெற்றிவேல் மற்றும் சக்திவேல் இருவரும் ஈரோட்டில் அரசு உதவி  பெறும் பள்ளியில் 8 மற்றும் 7 ம் வகுப்பு பயின்று வருகின்றனர்.. தாய் வள்ளி உயிரிழந்த நிலையில் இருவரும் காப்பகத்தில் தங்கி பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

  இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் ஆதார் எண் பெறுவதற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆதார் மையத்தில் பதிவு செய்துள்ளனர். ஆனால் இருவருக்கும் ஆதார் எண் கிடைக்கவில்லை. தொழில் நுட்ப கோளாறால் ஆதார் பதிவு பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆதார் மையத்தில் தெரிவித்துள்ளனர்.

  இதையும் படிங்க : தாயை கொன்று வீட்டில் புதைத்த மகன்.. விழுப்புரத்தில் அரங்கேறிய கொடூரம்

  அதன்பின் பலமுறை மாணவர்களின் பெரியம்மா சுதா ஆதார் பதிவிற்காக சென்றுள்ளார். இதற்காக ஒவ்வொரு முறையும் 1500 ரூபாய் வரை பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. எனினும் இருவருக்கும் ஆதார் எண் கிடைக்கவில்லை.

  இந்நிலையில், பள்ளியில் இருந்தும், விடுதியில் இருந்தும் ஆதார் எண்ணுடன் வருமாறு கட்டாயப்படுத்தி உள்ளனர். இதனால் செய்வதறியாது திகைத்த சுதா இரண்டு சிறுவர்களையும் அழைத்து கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.  ஆட்சியர் அலுவலக வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அவர், மாணவர்களின் படிப்பு தடைபடாமல் இருக்க ஆதார் எண் பெற்றுத்தர வலியுறுத்தினார்.

  இதையும் படிங்க : மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

  அப்போது ஆதார் எண் இல்லாமல் வங்கி கணக்கு தொடங்க முடியவில்லை என்றும், சாதி சான்று உள்ளிட்ட மற்ற சான்றிதழ்களை பெற முடியவில்லை என்றும் கூறினார். பள்ளியில் படிப்பை தொடர இத்தகைய சான்றிதழ்களை கோருவதால் வேலைக்கு செல்லாமல் மாணவர்களை அழைத்து கொண்டு அலுவலகங்களுக்கு அலையும் நிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார். பின்னர் தனது நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் மனு ஒன்றையும் அளித்தார்.

  செய்தியாளர் : பாபு - ஈரோடு

  Published by:Karthi K
  First published:

  Tags: Aadhaar card, Erode