முகப்பு /செய்தி /ஈரோடு / "ஈரோடு திராவிட மண்... திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்..." - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு!

"ஈரோடு திராவிட மண்... திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும்..." - அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேச்சு!

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் செஞ்சி மஸ்தான்

Erode News : ஈரோட்டில் தொழுகை முடித்து வந்தவர்களிடம் அமைச்சர் செஞ்சி மஸ்தான், அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் வாக்கு சேகரிப்பு.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுவதையடுத்து அரசியல் கட்சிகள் வாக்குசேகரிப்பு பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் ஈரோடு புதுமை காலனியில் உள்ள மனாரூல் ஹீதா மஸ்ஜீத் பள்ளிவாசலில் தொழுகை முடிந்து வந்த இஸ்லாமியர்களிடம் வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செஞ்சி மஸ்தான் கூறுகையில், “திமுக ஆட்சியில் மக்கள் சார்ந்த திட்டங்கள் நிறைவேற்றப்படுவதால் மக்கள் திமுகவை வரவேற்கின்றனர். இதனால் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும். திமுக மக்களுக்காக சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டி வருகிறது. ஈரோடு திராவிட மண் என்பதால் திராவிட மாடல் ஆட்சியில் உறுதியாக திமுக கூட்டணி கட்சி வேட்பாளர் இளங்கோவன் வெற்றி பெறுவார்” என்று தெரிவித்தார். இதேபோல் அதே பகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார்.

செய்தியாளர் : பாபு - ஈரோடு

First published:

Tags: Election, Erode, Local News