செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும், குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி இருப்பதாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் உணவு பொருள் வழங்கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை சார்பில் பொது விநியோக திட்ட அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில், உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி உணவுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிர்வாக இயக்குனர் பிரபாகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக 289 பயனாளிகளுக்கு 2.18 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு கடன் உதவிகள் மற்றும் 10 நபர்களுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கிய, அமைச்சர் சக்கரபாணி அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, விவசாயிகளிடம் வாங்கும் நெல்லை உடனடியாக அரவைக்கு அனுப்ப முன்னுரிமை தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்த வகையில் 8,201 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.
செப்டம்பர் 1 முதல் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யவும் குவிண்டால் ஒன்றுக்கு 100 ரூபாய் கூடுதலாக விவசாயிகளுக்கு வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தமிழகத்தில் 15 மாதங்களில் 12,54,209 குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. அரிசி ,சர்க்கரை, பருப்பு ஆகியவற்றை பாக்கெட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார். கும்பகோணத்தில் 92,500 கிலோ அரிசி தான் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. அந்த அரிசியை வழங்கிய 2 ஆலைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
Must Read : கள்ளக்குறிச்சி மாணவி உடலை நாளை காலை பெற்றுக்கொள்கிறோம்.. போலீஸ் பாதுகாப்பு அவசியமில்லை - பெற்றோர் தரப்பு நீதிமன்றத்தில் தகவல்
அவர்களிடம் இருந்து, இழப்பீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அந்த அரிசியை வெளி மார்கெட்டில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர், ரேஷன் கடைகளில் கைரேகை பதிவு செயல்படாத போதும் பொருட்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றும், அவ்வாறு வழங்காத ரேஷன் கடை ஊழியர்களின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.
செய்தியாளர் - மா.பாபு, ஈரோடு.
உங்கள் நகரத்திலிருந்து(ஈரோடு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.