முகப்பு /செய்தி /ஈரோடு / ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறை இசைத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பறை இசைத்து மகிழ்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

பறையிசைக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்

பறையிசைக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ்

திமுக நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகள் குறித்து தொலைப்பேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு இடைத்தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலை நிகழ்ச்சியின்போது பறையிசைத்து மகிழ்ந்தார்.

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பணியாற்றி வரும் திமுக நிர்வாகிகளிடம் தேர்தல் பணிகள் குறித்து தொலைப்பேசி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பரப்புரை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கியுள்ளன. அந்த வகையில் திருவண்ணாமலை திமுக வடக்கு மாவட்ட செயலாளரிடம் தேர்தல் களப்பணிகள் குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் அவருக்கு ஆலோசனைகளையும் வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் வீரப்பன் சத்திரம் பகுதியில் திமுக சார்பில் வாக்காளர்களை கவரும் வகையில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடலில் சந்தனம் பூசிக்கொண்டு கிராமிய கலைஞர்கள் தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இதனிடையே மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

ஈரோடு இடைத்தேர்தலில் அமைச்சர்கள் முகாமிட்டு பரப்புரை மேற்கொண்டு வரும் சூழலில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, காவிரிக்கரை பகுதியில் அமைந்துள்ள கலைத்தாய் கலை பயிற்சிப்பள்ளி மாணவர்களின் தப்பாட்டம், சிலம்பாட்டம், சுருள்வாள் போன்ற வீர விளையாட்டுகளையும், நீர் மேலாண்மையை வலியுறுத்திய தட்டு விளையாட்டுகளையும் பார்வையிட்டு பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார். அப்போது மாணவர்களிடம் இருந்து பறை இசைக்க கற்றுக் கொண்ட அமைச்சர், பறை இசைத்து மகிழ்ந்தார்.

First published:

Tags: Erode Bypoll, Erode East Constituency, Minister Anbil Mahesh