ஹோம் /நியூஸ் /ஈரோடு /

பண்ணாரி சோதனைசாவடியில் சிறுத்தை நடமாட்டம்.. வாகன ஓட்டிகள் அச்சம்

பண்ணாரி சோதனைசாவடியில் சிறுத்தை நடமாட்டம்.. வாகன ஓட்டிகள் அச்சம்

சிறுத்தை நடமாட்டம்

சிறுத்தை நடமாட்டம்

Leopard | ஈரோடு மாவட்டம் பண்ணாரி அம்மன் கோவில் சோதனைசாவடியில் சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் சிறுத்தை, கரடி, மான், யானை என பல்வேறு உயிரினங்கள் இருக்கின்றன. இதில் சமீபகாலமாக சிறுத்தை திம்பம் கொண்டை ஊசி வளைவுகளில் சுற்றித்திரிந்து வந்த நிலையில் தற்போது பண்ணாரி காவல்துறை சோதனை சாவடி அருகில் சுற்றி திரிந்துள்ளது.

இந்நிலையில் காவல்துறையினர் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த பொழுது சாலையோரம் சிறுத்தை அமர்ந்திருந்ததை பர்த்து காவல்துறையினர் அச்சம் அடைந்தனர். உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூண்டு வைத்து பிடிக்கக் கோரியுள்ளனர்.

Also see... மீண்டும் பகீர் கொடுக்கும் கொரோனா.. உயர் அதிகாரிகளுடன் பிரதமர் ஆலோசனை!

பண்ணாரி கோவிலில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுனர்கள்  தங்குவதால்ல் சிறுத்தை அவர்களை தாக்கக்கூடும் என்ற அபாயம் உள்ளது.

செய்தியாளர்: தினேஷ், ஈரோடு 

First published:

Tags: Erode, Leopard