முகப்பு /செய்தி /ஈரோடு / வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ஊற்றிய பெண்..!

வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் ஆத்திரம்.. கள்ளக்காதலன் மீது கொதிக்கும் எண்ணெய்யை எடுத்து ஊற்றிய பெண்..!

கைது செய்யப்பட்ட பெண்

கைது செய்யப்பட்ட பெண்

Erode | ஈரோட்டில் கள்ளக்காதலன் வேறு ஒரு திருமணத்திற்கு தயாரானதால் ஆத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றியதாக இளம்பெண் வாக்குமூலம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டம் பவானியில் திருமணத்தை தாண்டிய உறவில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் மீது கொதித்த எண்ணெய்யை ஊற்றிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம் வர்ணபுரத்தை சேர்ந்த மீனாதேவி என்பவர், கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது  உறவுக்கார இளைஞரான கார்த்திக் என்பவருக்கும், மீனாதேவிக்கும் தொடர்பு ஏற்பட்டது. இது  திருமணம் தாண்டிய உறவாக  மாறியது.

இந்நிலையில், கார்த்திக்கிற்கு வேறு பெண்ணுடனும் தொடர்பு இருந்தது மீனாதேவிக்கு தெரியவந்தது. இது குறித்து கார்த்திக்கிடம் கேட்ட போது, அந்த பெண்ணை தான், திருமணம் செய்து கொள்ள போவதாக மீனாதேவியிடம் கூறியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனா தேவி, அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த சமையல் எண்ணெய்யை கார்த்தி மீது ஊற்றினார். படுகாயம் அடைந்த கார்த்திக் தோல் உறிந்த நிலையில் கதறி அழுது துடிதுடித்து கொண்டிருந்தார். இதனை கண்ட பொதுமக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து மீனா தேவியை கைது செய்தனர்.

செய்தியாளர்: பாபு, ஈரோடு.

First published:

Tags: Crime News, Erode, Illegal affair, Local News