ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோட்டில் நடமாடும் எரியூட்டும் தகன வாகன சேவை தொடக்கம்

ஈரோட்டில் நடமாடும் எரியூட்டும் தகன வாகன சேவை தொடக்கம்

நடமாடும் தகன வாகனம்

நடமாடும் தகன வாகனம்

ஈரோட்டில் முதல் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகம் செய்யப்பட்டது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் ஆத்மா மின் மயானத்தில், தமிழகத்தில் முதன் முறையாக நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் அறிமுகப்படுத்தும் விழா நேற்று மாலை நடந்தது. நிகழ்ச்சிக்கு ஆத்மா அறக்கட்டளை தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக நிறுவன தலைவர் சகாதேவன், ரோட்டரி ஆளுநர் இளங்குமரன் ஆகியோர் பங்கேற்று, நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை துவக்கி வைத்தனர்.கிராமங்களிலும் ஆத்மா மின் மயானம் சேவை செய்ய நடமாடும் எரியூட்டும் தகன வாகனத்தை அறிமுகப்படுத்தினர்.

கிராமப்புறங்களில் எரியூட்டுவதற்கு விறகு அல்லது சாண வரட்டி மூலம் உடலை தகனம் செய்வர். இதற்கு ரூ.15,000 வரை செலவு செய்தும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன் தகனம் செய்ய சுமார் 8 மணி நேரம் தேவைப்படும்.ஆனால் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட நடமாடும் எரியூட்டும் தகன வாகனம் மூலம் ஒரு மணி நேரத்தில் எரியூட்டி, இறந்தவரின் குடும்பத்திற்கு அஸ்தி வழங்கப்படும் என்று ரேட்டரி ஆத்மா நிர்வாகத்தினர் கூறுகின்றனர்.

மேலும் நடமாடும் எரியூட்டும் தகன வாகனம், ஆத்மாவின் ஆம்புலன்சு வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைக்கப்படும் என்றும் முழுக்க முழுக்க கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி மட்டுமே தகனம் செய்யப்படும் என்றும்  இந்த வாகனம் மாநகராட்சிக்கு வெளியே குடியிருப்பு பகுதி இல்லாத கிராம மயானம் மற்றும் விவசாய நிலத்தில் மட்டும் நிறுத்தி எரியூட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Also see... கருகலைப்பு மாத்திரை சாப்பிட்ட 33 வயது பெண் மரணம்

இந்த வாகனத்தின் சேவையை பெற கட்டணமாக ரூ.7,500 செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தனர். மேலும் நடமாடும் எரிவாயு தகன வாகனம் செயல்படும் முறையை சோதனை செய்தும் காட்டினர்.

செய்தியாளர்: மா.பாபு, ஈரோடு            

First published:

Tags: Erode, Local News, Tamil News