ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோடு கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் கனமழை.. தரைப்பாலத்தில் வெள்ள நீர் பாய்வதால் மக்கள் அவதி

ஈரோடு கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் கனமழை.. தரைப்பாலத்தில் வெள்ள நீர் பாய்வதால் மக்கள் அவதி

ஈரோடு

ஈரோடு

பர்கூர் மலைப்பகுதியில்  பெய்த கனமழையால் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளம் தரைப்பாளத்தை மூழ்கடித்தபடி  சென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு மாவட்டம் அந்தியூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட, கொம்பு தூக்கி அம்மன் கோவில் வனப்பகுதியில் அதிகாலை முதல் கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக  வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மழை நீர் ஆனது கொம்பு தூக்கி அம்மன் பள்ளத்தில்  சென்றது. அதிக அளவு பள்ளத்தில் தண்ணீர் சென்றதன் காரணமாக வனத்துசின்னப்பர் கோவில் அருகே உள்ள தரைப்பாலத்தை வெள்ள நீரானது மூழ்கடித்துச் சென்றது.

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு நீர்  வரத்து குறைய தொடங்கியது.  அதிகப்படியான வெள்ள நீர் காற்றாற்று வெள்ளம் போல் சென்றதில், கொம்பு தூக்கி அம்மன் கோவில் ஓடை வழியாக  பவானி ஆற்றில் சென்றது. திடீரென இன்று பர்கூர் மலைப்பகுதியில் பெய்த கன மழையினால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதேப்போல் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொண்டையம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சஞ்சீவராயன் ஏரியில் இருந்து காலை நேரங்களில் பாட்டாளி சாலையில் உள்ள தரைப்பாலங்களில் வெள்ளம் ஏற்படுகிறது.

மழை வெள்ளம்

கொண்டையம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஐயப்பன் நகர் பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த குடியிருப்புகளை சுற்றியும் காடுகள் உள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் காடுகளில் இருந்து வெளியேறிய வெள்ள நீர் ஐயப்பன் நகர் பகுதியில் உள்ள வீடுகளின் சுவர்களில் தண்ணீர் ஊற்றெடுத்து வெளியேறி வருவதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இரவு நேரங்களில் கனமழை பெய்தால் வீடு இடிந்து விழும் அபாயம் உள்ளதால் இரவு முழுவதும் தூக்கம் இன்றி தவிப்பதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: தினேஷ் (ஈரோடு)

First published:

Tags: Erode, Local News, Tamil News