ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் பட்டியலின மாணவ - மாணவர்களை கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்ய வைத்த விவகாரத்தில் பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள பாலக்கரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 32 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளியிலுள்ள கழிவறைகளை பள்ளி தலைமை ஆசிரியை கீதாராணி கழிவறை பள்ளியில் பயிலும் பட்டியலின மாணவ மாணவிகளை கொண்டு சுத்தம் செய்யவைத்ததாக எழுந்த புகார் எழுந்த்து.
இதையும் படிக்க : TracKD APP : குற்றவாளிகளை கண்காணிக்க மொபைல் ஆப்... தமிழக காவல்துறையின் அசத்தல் திட்டம்!
இது தொடர்பாக மாணவ மாணவியின் பெற்றோர்கள் பெருந்துறை காவல்துறையினர் மற்றும் பெருந்துறை வட்டார கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். புகாரைத்தொடர்ந்து பவானி, சென்னிமலை, பெருந்துறை வட்டார கல்வி அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர் பள்ளியில் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் தலைமை ஆசிரியை கீதாராணி மீது சிறுவர்களை வேலைக்கு அமர்த்தியது , ரசாயன பொருட்களை சிறுவர்களை கொண்டு கவனக்குறைவாக கையாள செய்வது, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தலைமை ஆசிரியர் தலைமறைவானார்.
இந்நநிலையில் இன்று அதிகாலை தலைமறைவாக இருந்த கீதாராணியை பெருந்துறை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணைக்கு பின் தலைமைஆசிரியை கீதாராணியை பெருந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
செய்தியாளர் : பாபு (ஈரோடு)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erode, Head Master, Local News, Teacher