ஹோம் /நியூஸ் /ஈரோடு /

விரைவில் நல்ல செய்தியை சொல்கிறேன் - டிடிவி தினகரன் பேட்டி

விரைவில் நல்ல செய்தியை சொல்கிறேன் - டிடிவி தினகரன் பேட்டி

டிடிவி தினகரன்

டிடிவி தினகரன்

இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் அதிமுக போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக போட்டியிடுவது குறித்து விரைவில் நல்ல செய்தி கூறப்படும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா கடந்த 4-ம் தேதி மரணமடைந்ததைத் தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு திமுக மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளில் காங்கிரஸ் மற்றும் அதிமுக போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாமக இந்த தேர்தலில் போட்டியிடப்போவதில்லை எனவும் யாருக்கும் ஆதரவும் கொடுக்கப்போவதில்லை எனவும் பாமக மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் அமமுக இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமா என்ற கேள்விக்கு பதிலளித்த டிடிவி தினகரன், திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம் எனவும் அதுவே இலக்கு என்றும் தெரிவித்து விரைவில் நல்ல செய்தி வரும் என தெரிவித்தார். மேலும் கட்சி நிர்வாகிகள் அனைவரும் இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவதாகவும் இதுகுறித்த அறிவிப்பை 27ஆம் தேதி தெரிவிப்பதாகவும் கூறினார்.

நாளை மாலை 4 மணிக்கு அதிமுகவினர் பாஜக தலைவர் அண்ணாமலையை அதிமுகவினர் நேரில் சந்தித்து இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளனர். ஈரோடு இடைத்தேர்தலில் பாஜக போட்டியிட ஆர்வம் தெரிவித்து வந்த நிலையில் அதிமுக களம் காண திட்டமிட்டுள்ளதால் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி பாஜக ஆதரவை பெற அதிமுக திட்டமிட்டுள்ளது.

First published:

Tags: AMMK, Erode, Erode Bypoll, Erode East Constituency, TTV Dhinakaran