Home /News /erode /

அந்தியூரில் யானை தந்தம் கடத்த முயன்ற நான்கு பேர் கைது...

அந்தியூரில் யானை தந்தம் கடத்த முயன்ற நான்கு பேர் கைது...

ஈரோடு- யானை தந்தத்தை கடத்த முயன்ற 4 பேர் கைது

ஈரோடு- யானை தந்தத்தை கடத்த முயன்ற 4 பேர் கைது

Erode | ஈரோடு மாவட்டம் அந்தியூரில் யானை தந்தம் கடத்த முயன்ற நான்கு பேர் கொண்ட கும்பலை நக்சல் தடுப்பு தனி பிரிவு போலீசார் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India
    ஈரோடு மாவட்டம் கவுந்தபாடி பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவர் யானை தந்தம் கடத்துவதாக மாவட்ட நக்சல் தடுப்பு தனிப்படை காவலர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து தனிப்பிரிவு காவலர்கள் சந்திரசேகரிடம் ரகசிய விசாரணை மேற்கொண்டதில் அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலம்  பகுதியை சேர்ந்த ராசு மற்றும் பர்கூர் மலை கிராமம் கல்வாரை பகுதியை சேர்ந்த செல்லப்பன், பர்கூர் மலை கிராமம் கடை ஈரட்டி பகுதியை சேர்ந்த மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி ஆகிய ஐந்து  பேரும் கூட்டாக சேர்ந்து கடத்த முயன்றது தெரிய வந்தது.

    தந்தங்களை கைப்பற்றிய நக்சல் பிரிவு போலீசார் அந்தியூர் வனத்துறையினரிடம் தந்தங்களை கடத்த முயன்ற சந்திரசேகர், ராசு, செல்லப்பன் மற்றும் மகேந்திரன் ஆகிய நான்கு பேரையும் ஒப்படைத்தனர். இதன் பின்னர் வனத்துறையினர் நான்கு பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து இரண்டு அடி நீளம் உள்ள இரண்டு ஜோடி யானை தந்தங்களை பறிமுதல் செய்தனர்.

    Also see... மதுரை மீனாட்சியம்மன் கோவில் நிலம் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு...

    மேலும் தலைமறைவாக உள்ள பர்கூர் மலை கிராமம் கல் வாடை பகுதியை சேர்ந்த சுப்பிரமணியம் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர். தொடர்ந்து யானையின் தந்தங்களை வைத்து வனப்பகுதியில் அத்துமீறி நுழைந்து யானைகளை வேட்டையாடி தந்தங்களை கடத்தினார்களா? அல்லது  வயது முதிர்வின் காரணமாக வன பகுதியில் உயிரிழந்த யானைகளில் இருந்து தந்தங்களை கடத்தினார்களா? என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செய்தியாளர்: தினேஷ், ஈரோடு
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Elephant, Erode

    அடுத்த செய்தி