ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோட்டில் செயல்பட்டு வந்த போலி வங்கி... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

ஈரோட்டில் செயல்பட்டு வந்த போலி வங்கி... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

கூட்டுறவு வங்கி என்ற பெயரில்  செயல்பட்டு வந்த போலி வங்கி

கூட்டுறவு வங்கி என்ற பெயரில்  செயல்பட்டு வந்த போலி வங்கி

Erode | இதுவரை 1000 பேர் வரை இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்த காவல்துறையினர் அதன் உரிமையாளர் சந்திரபோஸ் வேதாசலம் என்பவரை சென்னையில் கைது செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Erode, India

  ஈரோட்டில் வேளாண்மை கூட்டுறவு வங்கி என்ற பெயரில்  செயல்பட்டு வந்த போலி வங்கியில் சென்னையை சேர்ந்த குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ஈரோடு அடுத்த சோலாரில் கடந்த இரண்டு மாதங்களாக ஊரக மற்றும் வேளாண்மை விவசாயிகள் கூட்டுறவு வங்கி லிமிடெட் என்ற கூட்டுறவு செயல்பட்டு வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் இந்த வங்கியில் 8 பேர் கணக்கு வைத்து உள்ளனர். இந்த வங்கி மதுரை, நாமக்கல், ஈரோடு, சென்னை உட்பட 8 இடங்களில் செயல்பட்டு வந்துள்ளது.

  இந்நிலையில், கடந்த மாதம்  வங்கியில் வேலை வாங்கி தருவதாக  நாமக்கலை சேர்ந்த பெண் ஒருவரிடம் பணம் பெற்று வேலை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதுதொடர்பாக பெண் அளித்த புகாரில் முதலில் விசாரணை நடத்திய காவல்துறையினர் பின்னர் இந்த விசாரணை சம்பந்தமாக ஆர்.பி.ஐ.யிடம் கேட்டபொழுது இதுபோன்ற வங்கி செயல்பட்டதே தெரியாது என்றும் ஆர்.பி.ஐயின் அனுமதி இல்லாமல் நடைபெற்று  வந்ததும் தெரியவந்தது.

  இதையும் படிங்க : மின் கட்டணம் 25 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

  இதனையடுத்து, சென்னை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் ஆர்.பி.ஐ. இயக்குனர் வங்கி குறித்து அளித்த புகாரின்பேரில் சென்னை உட்பட 8 இடங்களிலும்  குற்றப்பிரிவு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு சோலாரில் உள்ள  போலி வங்கி கிளையில் சோதனை நடத்திய குற்றப்பிரிவு வங்கியில் இருப்பு வைத்து இருப்பவர்களின் விவரங்களை அடங்கிய முக்கிய ஆவணங்கள் கணினி உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.

  மேலும்  இதுவரை 1000 பேர் வரை இந்த வங்கிகளில் கணக்கு வைத்துள்ளதாகவும் தெரிவித்த காவல்துறையினர் அதன் உரிமையாளர் சந்திரபோஸ் வேதாசலம் என்பவரை சென்னையில் கைது செய்து உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும் பொதுமக்கள் இதுபோன்ற போலி வங்கிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

  செய்தியாளர் : பாபு - ஈரோடு

  Published by:Karthi K
  First published:

  Tags: Crime News, Erode