ஒடிசா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் சுதீர் (29), என்பவர் வேலை தேடி நண்பரின் உதவியுடன் ஈரோடு வந்துள்ளார். இதையடுத்து, ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள தனது நண்பர் திலீப்புடன் தங்கி இருந்தவாறு வேலை தேடி உள்ளார். அப்போது இவரை தொடர்பு கொண்ட நபர் ஒருவர் வேலை வாங்கி தருவதாக கூறி அழைத்து சென்றுள்ளார். இதனை நம்பி சுதீர் மற்றும் திலீப் இருவரும் சென்றுள்ளனர். இந்நிலையில், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்து சென்ற நபர் அங்கு இருந்த மேலும் சிலருடன் சேர்ந்து கொண்டு சுதீரையும், திலீப்பையும் மிரட்டி இருவரும் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.5,200ஐ பறித்துள்ளனர். மேலும் செல்போனை பறித்த கும்பல் அதில் கூகுள்-பே இருப்பதை கண்டு அதன் மூலம் பணம் செலுத்த மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து, இருவரிடமும் பணம் இல்லாத நிலையில், ஒடிசாவில் உள்ள உறவினர்களிடம் கூகுள்-பே மூலம் பணத்தை பெற்று அதனை மிரட்டல் கும்பலிடம் கொடுத்துள்ளனர். அதன்பின் இருவரையும் வேனில் அழைத்து சென்று காட்டு பகுதியில் இறக்கி விட்டு வழிப்பறி கும்பல் தலைமறைவானது. அதன் பின் அங்கிருந்தவர்கள் உதவியுடன் காவல் நிலையம் வந்த இருவரும் நடந்தது குறித்து புகார் அளித்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த ஈரோடு வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வட மாநில தொழிலாளர்களை மிரட்டிய வீரப்பன்சத்திரம் பெரியவலசு பகுதியைச் சேர்ந்த கார்த்திக், திருச்செங்கோட்டை சேர்ந்த பூபதி, பிரவீன், நாராயண வலசை சேர்ந்த லிங்கேஷ் மற்றும் பீகார் மாநிலத்தை சேர்ந்த பிபின் குமார் ஆகிய 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சோமசுந்தரம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்தியாளர் : பாபு - ஈரோடு
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, Erode, Local News