Home /News /erode /

மக்கள் தொடாந்து ஏமாந்தால் பாஜக தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி விதிப்பார்கள் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

மக்கள் தொடாந்து ஏமாந்தால் பாஜக தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி விதிப்பார்கள் : ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் இ.வி.கே.எஸ் இளங்கோவன்

காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் இ.வி.கே.எஸ் இளங்கோவன்

Erode | பால், நெய், தயிர் மீதும் பாஜகவினர் ஜிஎஸ்டி வரி விதித்துள்ளனர்.  தொடாந்து மக்கள் ஏமாந்தவர்களாக இருப்பார்களே ஆனால் தாய்ப்பாலுக்கு கூட பாஜகவினர் ஜிஎஸ்டி போட்டு விடுவார்கள் என கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூரில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்ட காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறினார். 

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
  கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள நம்பியூரில் மூத்த காங்கிரஸ் தலைவர் காமராஜ் கல்வி அறக்கட்டளை நிறுவனர் என்.கே கருப்புசாமிக்கு பாராட்டு விழா தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் திராவிடக் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே சிறப்புறையாற்றினர். இந்த பாரட்டு விழாவில் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள், காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த  கி.வீரமணி, "மாணவர்கள் மத்தியிலே ஏற்பட்டுள்ள மிகபெரிய பிரச்சனை, போதை பொருள்களை பள்ளிக்கூடங்களில் கொண்டு வந்து திணிப்பது, மாணவர்களை எப்படியாவது வசியப்படுத்துவது போன்ற மிகபெரிய  தொல்லைகள் ஏற்பட்டிருப்பது. இது காவல்துறை மற்றும் அரசுக்கு மட்டும் சவால் அல்ல, இது நம்முடைய எதிர்காலத்தில் மாணவர்களின் வாழ்வை பாதிக்ககூடியது.

  ஒவ்வொரு பெற்றோரும் ஆசிரியரும் கவனமாக தங்கள் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். தீய சக்திகள் பள்ளிக்கூட வளாகங்களிலே வளராமல் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மாணவச் செல்வங்களுக்கு பல ரூபங்களில் கண்ணுக்குத் தெரியாத அளவிற்கு ஏதோ ஒரு பெரிய மிட்டாய் கொடுப்பதை போல அவர்களை வசியப்படுத்தி ஏமாற்றக்கூடிய ஆபத்து இருக்கிறது.

  இதை கண்காணிப்பது காவல்துறை மற்றும் பள்ளிகளுக்கு மட்டும் பொறுப்பல்ல. ஒவ்வொரு பெற்றோரும் ஒவ்வொரு பொது நல அமைப்புகளும் ஒருங்கிணைந்த ஒரு அணுகுமுறையை உருவாக்கிக் கொண்டு இதனை தடுத்து நிறுத்துவதில் தங்களுடைய பணியை மிக வேகமாக செய்ய வேண்டும்,

  பீகாரில் நிதீஷ் குமார் அவர்களுடைய தலைமையில் முதலமைச்சராகவும் அதேபோல ராஷ்ட்ரிய ஜனதா சார்பில் தேஜஸ்வி அவர்கள் துணை முதலமைச்சர் ஆகியிருப்பது மிகப்பெரிய அரசியல் திருப்பமாக கருதப்படுகிறுது,
  வருகின்ற 2024 ஆண்டு நடைபெறக்கூடிய தேர்தலிலே எதிர்க்கட்சிகள் நிச்சயமாக ஜனநாயகத்தை காப்பாற்றுகின்ற இந்த முயற்சிக்கு ஒரு புதிய திருப்பமாக அமைந்திருக்கிறது.  ஏற்கனவே பாஜக எந்த வித்தையை கையாண்டார்களோ அதேபோல அவர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது" என்றார்,

  பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மத்திய முன்னாள் அமைச்சர் இ.வி.கே.எஸ் இளங்கோவன்,” பாஜக தலைவர் அண்ணாமலை சட்டத்தை மீறுகின்றார்.  காவல்துறையினர் அவர் சொல்வதைக் கேட்பது கிடையாது. சில தினங்களுக்கு முன்பு ஈரோட்டிலே ஊர்வலமாக போகக்கூடாது என்று காவல்துறையினர் சொன்ன போது கூட சட்டத்தை மீறி அவர் சென்றிருக்கின்றார். ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு இது அழகா என்பதை கேட்க விரும்புகின்றேன்” என்று கேள்விக் கேட்டார்.

  Also see...டீ மாஸ்டரை தாக்கி மாமூல் கேட்டு அடாவடி - பிரபல ரவுடிக்கு வலைவீச்சு

  மேலும் பால், நெய், தயிர் மீதும் பாஜகவினர் ஜிஎஸ்டி வரி போட்டு இருக்கின்றார்.  தொடாந்து மக்கள் ஏமாந்தவர்களாக  இருப்பார்களே ஆனால் தாய்ப்பாலுக்கு கூட ஜிஎஸ்டி போட்டு விடுவார்கள். இலவச வேட்டி, சேலை டெண்டர் தாமதமானால் பா.ஜ.க. போராடும் என்ற அண்ணாமலை அறிவிப்பிற்கு, அண்ணாமலை தெருவில் இறங்கி போரட்டம் நடத்துவதை விட தெருக்களில் உள்ள சாக்கடைகளை சுத்தம் செய்தால் மக்களுக்கு பயனள்ளதாக இருக்கும்” என்றார்.

  செய்தியாளர்: கோபி, ஈரோடு
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Annamalai, BJP, Erode, EVKS Elangovan

  அடுத்த செய்தி