ஹோம் /நியூஸ் /ஈரோடு /

ஈரோட்டில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

ஈரோட்டில் உரிமம் இல்லாமல் செயல்பட்ட ஸ்கேன் சென்டருக்கு சீல் வைத்த அதிகாரிகள்..

ஸ்கேன் சென்டர் செயல்பட்ட மருத்துவமனை

ஸ்கேன் சென்டர் செயல்பட்ட மருத்துவமனை

Erode News : ஈரோட்டில் இயங்கி வந்த பிரபல மருத்துவமனையின் ஸ்கேன் இயந்திரம் மற்றும் அதன் அறைக்கு மருத்துவத்துறையினர் சீல் வைத்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Erode, India

ஈரோடு சத்தி ரோட்டில் ஐஸ்வர்யா மகளிர் & செயற்கை கருத்தரிப்பு மையம் இயங்கி வருகிறது. இந்நிலையில், ஈரோடு  மாவட்ட ஆட்சியர் தலைமையிலான மருத்துவ கண்காணிப்பு குழுவிற்கு இந்த மருத்துவமனையின் உள்ளே இயங்கும் ஸ்கேன் சென்டர் உரிமம் இல்லாமல் தொடர்ந்து இயங்கி வருவதாக புகார் வந்தது.

இதையடுத்து மருத்துவமனையை ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் பிரேமகுமாரி மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வில் ஸ்கேன் மையத்திற்கு உரிமம் இல்லாமல் இயங்கி வந்ததும்  தற்போது உரிமம் இருப்பதும் தெரியவந்தது. எனினும் உரிமம் இல்லாமல் பல நோயாளிகளுக்கு ஸ்கேன் செய்யப்பட்ட காரணத்தால் ஸ்கேன் இயந்திரம் மற்றும் ஸ்கேன் இயந்திரம் இருந்த அறைக்கு வருவாய்துறை அதிகாரிகள் முன்னிலையில் மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் சீல் வைத்தனர்.

மேலும். இதுதொடர்பாக விளக்கம் கேட்டு மருத்துவமனைக்கு அறிவிக்கை அளித்தனர். இந்த மருத்துவமனையின் கிளைகள் கர்நாடகா, பாண்டிச்சேரி, மகாராஷ்டிரா, தெலங்கானா,  பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, மொரிசியஸ் என பல்வேறு பகுதிகளில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

செய்தியாளர் : பாபு - ஈரோடு 

First published:

Tags: Crime News, Erode, Local News