ஈரோட்டில் சீமான் தேர்தல் பரப்புரையின் போது திமுக - நாம் தமிழர் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில் மோதலில் 10 பேர் மண்டை உடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நாம் தமிழர் கட்சியின் சீமான் நேற்று வாகனப் பாப்புரையில் ஈடுபட்டார். வாகனம் பரப்புரையானது காவேரி சாலையிலுள்ள திமுக தேர்தல் பணிமனை அருகே வரும்போது நாம் தமிழர் கட்சியினருக்கும் தேர்தல் பணிமனையிலிருந்த திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு , பின்னர் கைகலப்பாக மாறியது. இதில் இருதரப்பினரும் கடுமையாக தாக்கி கொண்டனர்.
இதனால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. கல் வீச்சு மற்றும் கம்புகளை கொண்டு தாக்கியதில் 3 காவலர்கள் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் நாம் தமிழர் கட்சியினரின் கார் கண்ணாடியை உடைத்த திமுகவினர் கார் டயரின் காற்றையும் பிடுங்கி விட்டனர். படுகாயமடைந்தவர்களை அருகிலிருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனிடையே சீமான் பிரசாரம் வாகனம் பொதுக்கூட்டத்திற்கு சென்றது.
மேலும் சீமான் பொதுக்கூட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி சுமார் 100 க்கும் மேற்பட்ட திமுகவினர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திலிருந்து 100 மீட்டர் தூரத்திற்குள் வந்து கோஷங்கள் எழுப்பினர். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன் தலைமையிலான அதிவிரைவுப்படை, துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படை காவலர்கள் 100-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டுனர்.மேலும் சீமான் பிரச்சாரத்தை 5 நிமிடங்களுக்குள் முடிக்க காவல்துறையினர் வைத்த கோரிக்கையை ஏற்று சீமான் பிரச்சாரத்தை 5 நிமடங்களில் முடித்தார். அதேபோல் திமுகவினரை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்தனர். சீமான் பொதுக் கூட்டத்திற்கு வந்த கட்சியினரையும் காவல்துறையினர் கலைத்தனர்.
இதனிடையே மருத்துவமனையில் தாக்குதலில் காயமடைந்த நாம் தமிழர் கட்சியினரை சீமான் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த் சீமான் , தோல்வி பயத்தால் திமுகவினர் இதுபோல வேளைகளில் ஈடுபடுவதாகவும், களம் எங்கள் கையில் பணம் அவர்கள் கையில் என்றார். திட்டமிடாமல் இதை செய்ய முடியாது திட்டமிடாமல் இருந்திருந்தால் அந்த இடத்திற்க்கு எப்படி கற்கள் கட்டைகள் வரும் என்று கேள்வி எழுப்பிய சீமான் , நிச்சயமாக மீண்டும் 25 தேதி வரை பிரச்சாரத்தில் ஈடுபடுவேன் என்றார். திமுகவினர் முன்கூட்டியே மொட்டை மாடிகளில் கற்களை குவித்து வைத்து தாக்குதல் நடத்தியுள்ளதாகவும , தொடர்ந்து அசாத்திய சூழ்நிலையை உருவாக்கி தொடர்ச்சியாக நெருக்கடிகளை கொடுத்து வருகின்றனர் என்றார்.
நாங்கள் மட்டுமா அனுமதி பெறாமல் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றோம் திமுக அதிமுக முறையாக அனுமதி பெறுகின்றனரா என்றும் கேள்வி எழுப்பினர். தொண்டர்கள் பல பேருக்கு கற்களால் தாக்கியதில் தலையில் காயம் பட்டுள்ளதாகவும் , அனைத்தையும் தேர்தல் ஆணையம் பார்த்து கொண்டு அமைதியாக உள்ளதாக குற்றம் சாட்டிய சீமான். அடிவாங்கி கொண்டு ஓடும் ஆட்கள் நாங்கள் இல்லை என்றும் எங்கள் கட்சியில் இளைஞர்கள் அதிகளவில் உள்ளனர். எப்படியும் தேர்தலை நடத்தி விடுவார்கள் , அப்படி நடத்தவில்லை என்றால் மீண்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்படும், மீண்டும் வேட்பாளரை நிறுத்துவோம், மீண்டும் பிரச்சாரம் செய்வேன் என்றார். முதல்வர் வரும்போது நான் பிரச்சாரம் செய்யக்கூடாது அதுக்கு தான் இத்தனையும் நடக்கிறது என்றும் தேர்தலுக்கு வாக்களிக்க திமுக 3 ஆயிரம், அதிமுக 2 ஆயிரம் வழங்குகிறது என்ற சீமான், தேர்தலுக்கு இன்னும் 3 நாட்கள்தான் உள்ளதால், கடைசி நேரத்தில் ஓட்டின் விலை அதிகரிக்கும் என்றார்.
இந்த நிலையில், நேற்று இரவு நடைபெற்ற கலவரத்தில் ஈடுபட்டதாக நாம் தமிழர் கட்சியின் கோவையைச் சேர்ந்த கணேஷ்பாபு, ஈரோடு திண்டலைச் சேர்ந்த விஜய் ஆகிய இருவரை போலீசார் இன்று கைது செய்தனர். இந்தச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
செய்தியாளர்: பாபு, ஈரோடு.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: DMK, Erode, Naam Tamilar katchi, Seeman